மதுரையில் வைகை ஆற்றுக்குள் அத்து மீறி நுழையும் வாகனங்களைத் தடுக்கும் விதமாகவும் கரையில் அசுத்தம் செய்வதை தடுக்கும் விதமாகவும் இரும்பாலான கதவுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மதுரை நகருக்குள் வைகையாறு 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்து செல்கிறது.
ஆற்றின் இரு கரைகளான வடகரை, தென்கரை என இரு கரைகளிலும் சாலைகள் போடப்பட்டு இரு வழி சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன. அதோடு 5அடி உயரத்திற்கு சுவர் கட்டப்பட்டுள்ளது.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் இடமான ஆழ்வார்புர ஆற்றங்கரையில் உள்ள சாய்வு தளத்தை பயன்படுத்தி ஏராளமான நான்கு சக்கர வாகனங்கள் ஆற்றினுள் நிறுத்தப்படுகின்றன. உள்ளே செல்வபர்கள், அங்கு பிளாஸ்டிக் குப்பைகளை வீசுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.