மாம்பழம்… தர்பூசணி… கோடையை குளிர்ச்சியாக்கும் ஜூஸ் வகைகள்

Currently the temperature in most parts of the country is above 40 degrees. Problems such as dehydration can occur due to lack of fluid in the body in summer. : கோடைகாலம் வந்துவிட்டாலே சிலர் குளிர் பிரதேசத்தை தேடி ஓடிவிடுவார்கள். இன்னும் சிலர் குளிர்ச்சியை தரும் பொருட்களை உடலில் சேர்த்துக்கொள்ள நினைப்பார்கள். இப்படி பலரும் குளிர்ச்சியை தேடி ஓட வைக்கும் இந்த கோடை காலத்தை இனிமையானமாக மாற்ற பல பானங்கள் உள்ளன.

தற்போதைய நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூரியன் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது. இந்த காலட்டத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறித்து பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும் நிலை ஏற்படும். ஆனால் சில பானங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலை நாள் முழுவதும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம். பெரும்பாலும் இந்த பானங்கள் அனைத்தும் வீட்டிலேயே தயாரிக்கலாம்.

பச்சை மாம்பழ ஜூஸ்

இந்த பச்சை மாம்பழ ஜூஸ் தினமும் குடித்து வந்தால் கோடை வெயிலை சமாளித்து நாள் முழுவதும் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளலாம். பச்சை மாம்பழத்தின் சதைப்பற்று சீரகம் மற்றும் புதினா ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் இ்நத பானம் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். இதில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது.

இளநீர்

கோடை காலத்தில் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படும் முக்கிய பானங்களில் ஒன்று இளநீர். இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகளவில் உள்ளது. கோடைகாலத்தில் இதனை எடுத்தக்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். மேலும் சருமம் மற்றும் முடி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும். உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையை தீர்க்கும்.

மஞ்சள் வாட்டர்

இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை கொண்ட மஞ்சள்,  கோடைகாலத்திலும் நமக்கு புத்துணர்ச்சியை தருகிறது. மஞ்சளுடன் இஞ்சி சாறு சேர்த்து குடிக்கும் போது உடல் குளிர்ச்சியாக இருக்கும். இதனுடன் ஆப்பிள் வினிகர் சேர்த்து குடிக்கலாம். இது உடலுக்கு தேவையாக ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

தர்பூசணி ஜூஸ்

கோடை காலத்தில் பரிந்துரைக்கப்படும் முக்கிய பானங்களில் ஒன்று தரபூசணி ஜூஸ். உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையை தீர்க்க தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தாலே போதுமானது. ஊட்டச்சத்து்ககள் நிறைந்துள்ள தர்பூசணி உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.