தேனி பங்களாமேட்டில் மாணவர் மற்றும் பொதுமக்கள் சிரமம் போக்க தனியார் பள்ளி நிர்வாகங்கள் இணைந்து அமைத்த ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
தேனி நகரில் மதுரை செல்லும் சாலையில் உள்ள பங்களாமேட்டின் அருகில் சில தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பகுதி வழியாக மதுரை போடி அகல ரயில் பாதை செல்கிறது. இப்பாதையில் ரயில் இயக்கப்படும் போது லெவல் கிராசிங் அடைக்கப்பட்டால் பள்ளி செல்லும் மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலமணி நேரம் காத்திருந்து அவதியுறும் சூழல் இருந்து வந்தது.
இதனை கருத்தில் கொண்டு பள்ளி வளாகத்தில் இருந்து இடமால் தெருவை இணைக்கும் வண்ணம் புதிய இரும்பு பாலம் அமைக்கப்பட்டது. தனியார் பள்ளி நிறுவனங்கள் இணைந்து பல லட்சம் ரூபாய் செலவில் இரும்பினாலான ரயில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கும் மாணவ மாணவியருக்கும் பயனளிக்கும் இந்த ரயில்வே மேம்பாலம் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் ரயில்வே அதிகாரிகள் தனியார் பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM