சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் இன்று ஒட்டுமொத்த சந்தையும் சரிவில் காணப்படும் நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 1 சதவீதத்திற்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது.
இது இன்று வெளியாகவிருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் சரிவில் காணப்படுகின்றது.
இதனை மோசமாக்கும் விதமாக சர்வதேச காரணிகளும் சந்தைக்கு எதிராக காணப்படுகின்றது.
தற்போதைய பங்கு நிலவரம்?
என் எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.36 சதவீதம் குறைந்து, 2604.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 2659 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 2593.55 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2856.15 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1906 ரூபாயாகும்.
பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.23 சதவீதம் குறைந்து, 2608.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 2659.59 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 2594.60 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2855 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 1906.50 ரூபாயாகும்.
எப்போது முடிவு?
ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் இரு இலக்கில் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகள் வர்த்தக நேர முடிவுக்கு பிறகு வெளியாகவுள்ளது. ஆக காலாண்டு முடிவுகளின் எதிரொலி அடுத்த சந்தை அமர்வில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை நிலவரம் என்ன?
12.05 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 909.57 புள்ளிகள் குறைந்து, 54,792.66 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிஃப்டி 284.65 புள்ளிகள் குறைந்து, 16,398 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
எதிர்பார்ப்பு?
யெஸ் செக்யூரிட்டீஸ் கணிப்பின் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் முறையே, 41.70 சதவீதம் மற்றும் 30.50 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே கோடக் செக்யூரிட்டீஸ் நிறுவனம் வரிக்கு பிந்தைய லாபம் மற்றூம் விற்பனையானது முறையாக, 32% மற்றும் 43.80% இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எபிடா விகிம் 34.60 சதவீதம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Reliance industries shares fall ahead of Q4 results
Reliance industries shares fall ahead of Q4 results/ரிலையன்ஸ் காலாண்டு முடிவு எப்படியிருக்கும்.. எதிர்பார்ப்புக்கு மத்தியில் பங்கு விலை 1% மேலாக சரிவு!