ரூ.2,500 கோடி கொடுத்தால் கர்நாடக முதலமைச்சர் ஆகலாம்: இடைத்தரகர்கள் பேரம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

பெங்களூரு: 2,500 கோடி ரூபாய் கொடுத்தால் தன்னை முதல்வர் ஆக்குவதாக இடைத்தரகர்கள் தெரிவித்ததாக கர்நாடக பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டில் கூறியிருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் பசனகவுடா பாட்டில். இவர் 2 முறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். விஜாப்பூர் நகரில் நேற்று மாலை பாஜக கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது 2,500 கோடி ரூபாய் பணம் இருந்தால் என்னை முதல்வர் ஆக்குவதாக சில இடைத்தரகர்கள் தெரிவித்ததாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக பாஜக ஆட்சியில் தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள், அமைச்சர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்து சர்ச்சை வலுத்து வரும் நிலையில் தற்போது 2,500 கோடி ரூபாய் பணம் இருந்தால் முதல்வர் ஆக்குவதாக தன்னிடம் இடைத்தரகர்கள் தெரிவித்தனர் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினரே பேசியுள்ளது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக எம்எல்ஏ பேச்சு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கார்நாடக மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.