வடமாகாணத்தில் இன்றைய தினம் கிராமப்புற பாடசாலைகள் வழமை போன்று நடைபெறுவதாக மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் ரி. ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
இன்று எமது செய்திப் பிரிவிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகளுக்கு, இன்றைய தினம் பஸ் சேவை இடம்பெறாமை மற்றும் எரிபொருள் பிரச்சினை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சமூகமளிக்காமையினால் பாடசாலை கல்வி செயற்பாடுகள் இடம்பெறவில்லை.
Logini Sakayaraja