நாட்டின் வடமேற்கு மாநிலங்களில் நாளை முதல் வெப்ப காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா, டெல்லி, தென்மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவின் விதர்பா மாநிலங்களில் நாளை முதல் 9 ஆம் தேதி வரை இயல்பை விட வெயில் அளவு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்ததால் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் வெப்பம் சுட்டெரித்தது. அதிகபட்சமாக 37.78 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்த வெப்பம் நாளாக, நாளாக அதிகரித்து ஏப்ரல் மாத இறுதியில் 47 டிகிரி செல்சியாக பதிவானதாகவும், இதனால், கடந்த வாரம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்து, மின் பற்றாக்குறை நிலவியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்: தெலங்கானா: மேகவெடிப்பால் கொட்டித்தீர்த்த பெருமழை; குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM