விளம்பர படத்தில் நடித்தவர் சுட்டுக்கொலை| Dinamalar

லாகூர்:பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ரெனலா குர்த் ஒகாரா நகரை சேர்ந்தவர்சிட்ரா21. இவர் உள்ளூர் ஜவுளிக்கடை விளம்பரத்தில் மாடலாக நடித்திருந்தார். மேலும் பைசலாபத் நகரில் தங்கியிருந்து தியேட்டரில் நடனம் ஆடி வந்தார்.

இது பாரம்பரியத்துக்கு எதிரானது என குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாட சிட்ரா வீட்டுக்கு வந்துஇருந்தார். அப்போது குடும்பத்தினருடன் வாக்குவாதம் ஏற்படவே சிட்ராவை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். இதையடுத்து போலீசார் ஹம்சாவை கைது செய்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.