வெளிநாட்டு பொருட்களுக்கு அடிமையாவதை குறையுங்கள்: பிரதமர் மோடி அழைப்பு

புனே:  ‘நாட்டு மக்கள் வெளிநாட்டு பொருட்களுக்கு அடிமையாவதை குறைக்க வேண்டும்,’ என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் சார்பில், ‘ஜிடோ கனெக்ட் – 2022’ என்ற தலைப்பில் வர்த்தக மாநாடு நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடங்கி வைத்து பேசியதாவது: நாட்டின் 75வது ஆண்டு சுதந்திர  தினத்தை கொண்டாடும் நேரத்தில், நாட்டு மக்கள் அனைவரும் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மந்திரத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். வெளிநாட்டு பொருட்களை சார்ந்து இருப்பதை நாம் குறைத்துக் கொள்ள வேண்டும். ஏற்றுமதிக்கான புதிய இடங்களை கண்டறிதல் வேண்டும்.  உள்ளூர் சந்தைகளிலும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பூஜ்ய குறைபாடு மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பூஜ்ய விளைவு இல்லாத பொருட்களை தயார் செய்யுங்கள். நாடு இன்று திறமை, வர்த்தம் மற்றும் தொழில்நுட்பத்தை முடிந்தவரை ஊக்குவிக்கு வருகின்றது. தன்னிறைவு கொண்ட இந்தியா தான் அரசின் பாதை மற்றும் எதிர்காலத்துக்கான தீர்மானமாகும். அரசின்  செயல்பாடுகள் வெளிப்படை தன்மை கொண்டதாக உள்ளது. தற்போது தொலைதூர கிராமங்களை சேர்ந்தவர்கள், சிறு கடைக்காரர்கள், சுயஉதவிக் குழுக்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக அரசிடம் விற்பனை செய்யலாம். இந்த உலகமே இந்தியாவை நம்பிக்கையுடனும், உறுதியுடனும் பார்த்து வருகின்றன. இந்த உணர்வு அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை தருவதாகும். இவ்வாறு அவர் பேசினார்.வாரத்துக்கு ஒரு யூனிகார்ன்மோடி தனது உரையில், ‘‘ஒவ்வொரு நாளும் நாட்டில் 10க்கும்  மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. வாரத்திற்கு  ஒருமுறை, ‘யூனிகார்ன்’ எனப்படும் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான  ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கப்படுகிறது,’ என்றும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.