ஷவர்மா உண்மையில் ஆபத்தான உணவா? உண்மை என்ன? விரிவான ரிப்போர்ட்


இளைஞர்கள் மத்தியில் தற்போது விருப்ப உணவாக மாறியுள்ளது ஷவர்மா எனும் துரித உணவு.

ஒரு ஷவர்மா சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடுவதைப் போன்ற உணர்வையும் தருவதுடன் நாவிற்கு ருசியாக அசைவ உணவு பிரியர்களின் முதன்மைப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

இதற்கிடையே கேரளாவில் ஷவர்மா உயிரைப் பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உண்மையில் அது ஆபத்தானதா என்பது குறித்து இங்கு காண்போம்.

ஷவர்மா எங்கு உருவானது?

ஷவர்மா என்னும் அரேபிய சொல் ‘சேவிர்மே’ எனப்படும் துருக்கி மொழியில் இருந்து வந்தது. இதற்கு அர்த்தம் சுற்றுதல். ஷவர்மா என்பது மேலை நாட்டு உணவாகும்.

லெபனானில் இந்த உணவு 15ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு சவூதி, துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்கள் ஷவர்மாவை அறிமுகப்படுத்தினார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் பரவிய ஷவர்மா, தற்போது இந்தியா உட்பட கனடா போன்ற நாடுகளில் துரித உணவாக மாறியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விற்பனைக்கு ஷவர்மா கொண்டு வரப்பட்டது. மொய்தீன் குட்டி ஹாஜி என்பவர் இதனை விற்பனை செய்தார்.

ஷவர்மாவின் தயாரிப்பு முறை

ஷவர்மாவின் பிரதான மூலப்பொருள் மாமிசம் தான். மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவை பயன்படுத்தப்பட்டாலும் பெரும்பாலும் கோழி இறைச்சி தான் இந்தியாவில் அதிகமாக சேர்க்கப்படுகிறது.

முட்டை கோஸ், கேரட், தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுடன் கோழி இறைச்சி சேர்த்து, சப்பாத்தியில் வைத்து சுற்றி அதனுள் மயோனீல் சேர்க்கப்பட்டு விற்கப்ப3டுகிறது.

இதில் சேர்க்கப்படும் மயோனீஸை தயாரிக்க சமைக்காத முட்டை, எண்ணெய் மற்றும் வினிகர் பயன்படுத்தப்படுகிறது. 

ஷவர்மாவினால் ஏற்படும் தீங்குகள்

  • சில நேரங்களில் சமையல் செயல்முறை சுகாதாரமற்ற நிலையில் நடைபெறுகிறது. விற்பனையாளர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

  • துரித உணவான ஷவர்மா அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் சமைப்படுகிறது. இதில் 120 கிராம் கொழுப்பு நிறைந்துள்ளது. இதனால் இருதய நோய்கள், இரைப்பை குழாயில் பிரச்சனை உண்டாகும்.
  • பசியுடன் இருக்கும்போது இதனை சாப்பிட்டால் கணையம் பாதிக்கப்படும்.

    அதிக கொழுப்பு உள்ளடக்கம், இது உடலில் மிகவும் எதிர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது.

  • ஷவர்மாவில் அதிக அளவு மசாலாப் பொருட்கள் உள்ளன, அவை இரைப்பை குடல் மற்றும் யூரோலிதியாசிஸ் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
  • இந்த உணவை தொடர்ந்து உட்கொள்வது அதிக எடைக்கு வழிவகுக்கும். அரேபிய நாடுகளில் விற்கப்படும் ஷவர்மாவிற்கும், இந்தியாவில் விற்கப்படும் ஷவர்மாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

    ஷவர்மாவில் உள்ள பிரச்சனை என்னவென்றால், அதில் பயன்படுத்தப்படும் மாமிசம் வெளியில் காற்று படும்படி வைக்கப்பட்டு தயாரிக்கப்படுவது தான்.

  • ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து தான் மாமிசத்தை கையாள வேண்டும். அதில் சுத்தம் என்பது மிக முக்கியம்.

    ஆனால், ஷவர்மாவைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் வெறும் கைகளால் மாமிசம் எடுக்கப்பட்டு ஷவர்மாவாக உருவாக்கப்படுகிறது. மேலும் பதப்படுத்தப்பட்ட மாமிசம் தான் பெரும்பாலும் ஷவர்மாவுக்கு உட்படுத்தப்படுகிறது.

  • ஷவர்மாவில் பயன்படுத்தப்படும் மாமிசம் குளிர்ச்சியான சூழலில் வைக்கப்பட்டு பின்னர் சூடுபடுத்தப்படுகிறது. இதனால் அந்த இறைச்சி சரியாக வேகாமல் கிளாஸ்ட்ரிடியம் எனும் பாக்டீரியாவை இறைச்சியில் உருவாக்குகிறது. இது போட்டுலினம் டாக்ஸினாக மாறுகிறது.

  • சமைக்காத முட்டையில் பாக்டீரியா அதிக அளவில் இருப்பதால், எண்ணெய்யுடன் சேர்க்கப்படும்போது கொழுப்பு அதிகளவில் உடலில் சேரும். இதனால் சீரான மண்டலம் பாதிக்கப்படும். இரவு நேரத்தில் இதனை சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.