ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், ஏற்கனவே கச்சா எண்ணெய் விலையானது மிக மோசமான விலையினை எட்டியது. இன்றளவிலும் சப்ளை சங்கிலியில் நிலவி வரும் பிரச்சனைகளுக்கு மத்தியில் எண்ணெய் விலையானது 110 டாலர்களுக்கு மேலாக காணப்படுகின்றது.
தற்போது பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 110 – 111 டாலராக வர்த்தகமாகி வருகின்றது.
இதே தற்போது சர்வதேச சந்தையில் விலையானது தற்போது 8.788 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.
நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க பாகிஸ்தானை போல ‘எரிவாயு’ பயன்படுத்த முடிவு?
14 வருட உச்சத்தில் இயற்கை எரிவாயு
இதற்கிடையில் இயற்கை எரிவாயு விலையானது 14 வருட உச்சத்தினை எட்டியுள்ளது. இது உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு மத்தியில் நிலவி வரும் பதற்றத்தின் மத்தியில் , ரஷ்யாவுக்கு எதிராக பல நாடுகளும் தடைகளை விதித்துள்ளன. இதற்கிடையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் வாங்குவதை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடுவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னணி ஏற்றுமதியாளர்
எனினும் ஐரோப்பிய நாடுகளின் இந்த திட்டத்திற்கு ஹங்கேரி உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகின் முக்கிய எரிபொருள் ஏற்றுமதியாளராக இருக்கும் ரஷ்யா, முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. ஐரோப்பிய நாடுகளும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவும் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன.
தேவை அதிகரிப்பு
அமெரிக்கா தனது பெட்ரோலிய இருப்புகளை நிரப்ப 60 மில்லியன் பேரல்களை வாங்கவுள்ளது. இது கச்சா எண்ணெய் விலையை மேலும் ஊக்குவிக்கலாம். இதே போல இயற்கை எரிவாயு விலையும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் மற்ற கமாடிட்டிகளில் புராபிட் புக்கிங் செய்யும் நிலையில், இதுவும் மற்ற கமாடிட்டிகளின் விலையை ஊக்குவிக்கலாம்.
கொரோனாவில் இருந்து மீட்சி
கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வந்த நிலையில், பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தேவையும் மீண்டு வரத் தொடங்கியுள்ளது. இது எரிபொருள் விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Natural gas prices hit a 14-year high amid EU announcements
Natural gas prices hit a 14-year high amid EU announcements/14 வருட உச்சத்தினை தொட்ட இயற்கை எரிவாயு விலை.. என்ன காரணம்..!