இந்த ஆண்டு செப்டம்பரில் சீனாவின் ஹாங்சோவு நகரில் நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இன்று அறிவித்தது.
2022ம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஹாங்சோவு நகரில் செப்டம்பர் 10 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆசிய விளையாட்டு மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளுக்காக அந்நகரில் சுமார் 56 போட்டித் தளங்களை அமைத்துள்ளனர். ஏற்கனவே பிப்ரவரியில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீனா தனது தலைநகரான பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடத்தியது.
இந்நிலையில் தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். அதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை. விளையாட்டுப் போட்டிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மட்டும் கூறியுள்ளனர். பிரம்மாண்ட விளையாட்டுப் போட்டிகள் நடக்க உள்ள ஹாங்சோவு நகரம், தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ள ஷாங்காய்க்கு அருகில் உள்ளது. கோவிட் இல்லாத நாடு என்ற அணுகுமுறை காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
Advertisement