6 மாதத்தில் ரூ.88,000 கோடியை காலி செய்த சோமேட்டோ.. எப்படி தெரியுமா?

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ கடந்த ஆண்டு தான், இந்திய பங்கு சந்தையில் அதன் பங்கு வெளியீட்டினை செய்தது.

இப்பங்கி விலையானது ஆரம்ப காலத்தில் நல்ல லாபத்தினை கொடுத்திருந்தாலும், நடப்பு ஆண்டு தொடக்கம் முதல் கொண்டே பெரும் சரிவினைக் கண்டு வருகின்றது.

இதற்கிடையில் இதன் சந்தை மதிப்பும் பெரும் சரிவினைக் கண்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ Q4: ரூ.4173 கோடி லாபம், ரூ.20901 கோடி வருமானம்.. மீண்டும் நம்பர் ஒன்..!

இன்றைய விலை நிலவரம்?

இன்றைய விலை நிலவரம்?

சோமேட்டோ பங்கின் விலையானது இன்று என் எஸ் இ-யில் 1.06% குறைந்து, 60.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 62.30 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 57.65 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 169 ரூபாயாகும். இதன் 52 வர குறைந்தபட்ச விலை 57.65 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலையும், 52 வார குறைந்தபட்ச விலையும் ஒன்றாகும்.

இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 1.22% குறைந்து, 60.50 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 57.65 ரூபாயாகும். இதன் இன்றைய அதிகபட்ச விலை 62.30 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 169.10 ரூபாயாகும். இதன் 52 குறைந்தபட்ச விலை 57.65 ரூபாயாகும்.

ரூ.87,000 கோடிக்கு மேல் சரிவு

ரூ.87,000 கோடிக்கு மேல் சரிவு

தொடர்ந்து 5வது நாளாக இப்பங்கின் விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இப்பங்கின் சந்தை மூலதனமானது 45,381.69 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இப்பங்கின் விலையானது பங்கு சந்தையில் பட்டியலிட்டதில் இருந்து, இன்று அதன் 52வார குறைந்தபட்ச விலையினை எட்டியுள்ளது.

ரூ.88,000 கோடி காலி
 

ரூ.88,000 கோடி காலி

இது இப்பங்கின் விலையானது 169.10 ரூபாயாக இருந்த போது, இதன் சந்தை மூலதனம் 1,33,144.38 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக இந்த உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 87,732.69 கோடி ரூபாய் சந்தை மூலதனம் குறைந்துள்ளது. கிட்டதட்ட 88000 கோடி ரூபாய் சந்தை மூலதனம் சரிவினைக் கண்டுள்ளது.

பலத்த இழப்பு

பலத்த இழப்பு

சோமேட்டோ பங்கு விலையானது கடந்த 4 – 5 மாதங்களில் மட்டும் 65 சதவீதம் சரிவினைக் கண்டுள்ளது. ஆக இதன் மூலம் சோமேட்டோ அதன் முதலீட்டாளர்களுக்கு கடந்த ஆறு மாதங்களில் பலத்த இழப்பினை கொடுத்துள்ளது. இது இன்னும் சரியலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்னும் இழப்பினை காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக மாதிரி

வணிக மாதிரி

சமீப காலமாக சோமேட்டோ பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. சோமேட்டோவின் வணிக மாதிரியானது, நுகர்வோரினையே அதிகம் சார்ந்துள்ளது. இதனால் பல சிக்கலை எதிர்கொள்கின்றது. இப்பங்கின் விலையானது இன்னும் சரிவினைக் காணலாம் என்றும், இப்பங்கின் அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் ஆனது 50 ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Disclaimer: This recommendations made above are those of individual analysts or broking companies, and not for good returns

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

zomato wipes off Rs.88,000 crore market capitalization in just 6 months

zomato wipes off Rs.88,000 crore market capitalization in just 6 months/6 மாதத்தில் ரூ.88,000 கோடியை காலி செய்த சோமேட்டோ.. எப்படி தெரியுமா?

Story first published: Friday, May 6, 2022, 20:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.