ஓலா தலைமை நிதி அதிகாரி ஜி.ஆர்.ஆருன் குமாருக்குத் தொடர்ந்து பல முக்கிய பொறுப்புகள் கொடுத்ததால், அதிருப்தியான ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருண் ஸ்ரீதேஷ்முக் ராஜிமானா செய்துள்ளது ஊழியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓலா நிறுவனத்தின் தினசரி செயல்பாடுகளில் கூடுதல் பொறுப்புகள் தலைமை நிதி அதிகாரி ஜி.ஆர்.ஆருன் குமாருக்கு வழங்கியுள்ளோம் என ஆங்கில ஊடகம் ஒன்றிடமும் ஓலா நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதில் தலைமை செயல் அதிகாரி அருண் ஸ்ரீதேஷ்முக்கிற்கு அளிக்கப்பட்ட பொறுப்புகளும் அடங்கும் என ஓலா விளக்கம் அளித்துள்ளது.
ஆரம்பிக்கலாங்களா.. இங்கேயும் கௌதம் அதானி-யின் வெற்றி பார்மூலா..!
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சர்ச்சை
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஓலா எஸ் 1 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி எரிவதாகவும், பழுதுகள் ஆவதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஓலா எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் பொறுப்பு அருண் ஸ்ரீதேஷ்முக்கிற்கு வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் சமீப காலமாக ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி வரும் செய்திகளில் நிர்வாகம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜினாமா
எனவே கடந்த சில வாரங்களாக அருண் ஸ்ரீதேஷ்முக்கிற்கு வழங்கப்பட்டு பொறுப்புகளைக் குறைத்துக்கொண்டே வந்துள்ளனர். இவருக்கு வழங்கப்பட்ட பொறுப்புகள் தலைமை நிதி அதிகாரி ஜி.ஆர்.ஆருன் குமாருக்கு அளிக்கப்படுவதைப் பார்த்து அருண் ஸ்ரீதேஷ்முக் அதிருப்த்தியடைந்து ராஜினாமா செய்துள்ளார் என நிறுவன ஊழியர்கள் கூறுகிறார்கள்.
ஓலா வணிகங்கள்
ஓலா நிறுவனம் ஓலா கார்ஸ் ஓலா ஃபுட்ஸ், ஓலா டேஷ், ஓலா மனி உள்ளிட்ட வணிகங்களைச் செய்து வருகிறது. அவற்றில் 90 சதவீத வருவாய் டாக்ஸி சேவையிலிருந்து தான் ஓலாவிற்கு கிடைக்கிறது.
ஐபிஓ
விரைவில் ஓலா நிறுவனம் எல்லா வணிகத்தையும் இணைத்து, ஐபிஓ மூலம் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான வேலைகளை முழுவீச்சாகச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Reason Behind Ola Cars CEO Arun Sirdeshmukh Resignation
Reason Behind Ola Cars CEO Arun Sirdeshmukh Resignation | CFO-க்கு முக்கிய பொறுப்புகள்.. ஓலா சி.இ.ஓ ராஜினாமா!