Meta-வின் கீழ் இயங்கி வரும்
பேஸ்புக்
நிறுவனம், தனது தளத்தை தொடர்ந்து மேம்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. டிக்டாக் நிறுவனத்தின் இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற முனைப்பில் பேஸ்புக் தளத்தில் அதிரடி மாற்றங்களை செய்துவருகிறது.
சமீபத்தில், இன்ஸ்டாகிராம் – பேஸ்புக் ஆகிய இரண்டு தளங்களின் கன்டெண்டுகளும் இணைக்கப்பட்டு பயனர் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படுகிறது. அதாவது, பேஸ்புக் தளத்தில் இருந்தபடியே இன்ஸ்டாகிராம் ரீல்ஸை பயனர்கள் பார்க்க முடியும்.
இதேபோல, பேஸ்புக்கிலும் ரீல்ஸ் அம்சத்தை
மெட்டா
நிறுவி தற்போது பிரபலப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது கிரியேட்டர்களுக்கு வெகுமதிகளை அறிவித்துள்ளது. அதுவும், கிரியேட்டர்கள் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என மெட்டா நிறுவனம் தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறது.
Elon Musk: ட்விட்டரில் எலான் மஸ்க் ஏற்படுத்தவிருக்கும் புதுமைகள்; பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
பேஸ்புக் ரீல்ஸ் வெகுமதிகள்
Reels Play
போனஸ் திட்டத்தில் படைப்பாளர்களுக்கு உதவும் புதிய “சவால்களை” அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக கிரியேட்டர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என மெட்டா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மக்களிடத்தில் எளிதாக சென்று சேரும் சிறந்த தனித்துவமான வீடியோக்களை உருவாக்கும் படைப்பாளர்களுக்கு, வெகுமதிகளை அளித்து கெளரவிப்பதே பேஸ்புக்கின் திட்டம். அவர்களுக்கு வெகுமதிகளை அளிக்கும் முறையை சீராக செயல்படுத்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.
Truth Social: வாய்ப்பில்ல ராஜா – ட்விட்டர் பக்கம் எல்லாம் இனி வர முடியாது!
பணத்தை ஈர்க்கும் வழிகள்
இந்த திட்டத்தில் அனைத்து கிரியேட்டர்களும் பங்கேற்கலாம் எனவும் பேஸ்புக் தெரிவித்துள்ளது. மாத மாதம் கொடுக்கப்படும் சவால்களில் இவர்கள் பங்கேற்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் பதிவேற்றும் 5 தனித்துவமான ரீல்கள் ஒவ்வொன்றும் 100 பார்வையாளர்களை முழுதாய் அடையும் போது $20 டாலர்கள் வரை சம்பாதிக்கலாம். இதே, இந்திய மதிப்பில் சுமார் 1,500 ரூபாய் உங்களுக்குக் கிடைக்கும்.
படைப்பாளிகள் ஒரு சவாலை நிறைவு செய்தவுடன், அடுத்த சவால் அவர்களுக்காக திறக்கப்படும். உதாரணமாக, மேலே உள்ள 5 ரீல் சவாலை ஒரு கிரியேட்டர் முடிக்கும்போது, அடுத்த சவாலை அவர்கள் பார்க்கமுடியும். அதில் எடுத்துக்காட்டாக, “நீங்கள் உருவாக்கும் 20 ரீல்கள் ஒவ்வொன்றும் 500 முழு பார்வைகளை எட்டும்போது $100 டாலர் சம்பாதிப்பீர்கள்” என்றிருக்கும்.
Xiaomi 12 Pro 5G: பிளாக்ஷிப் போன் விலை இவ்வளவு தானா – சர்ப்ரைஸ் கொடுத்த சியோமி!
பேஸ்புக் புதிய அம்சம்
பேஸ்புக்கில் ரீல்ஸ் ப்ளே படைப்பாளர்களுக்கான Insights வசதியை வெளியிடுவதாக நிறுவனம் கூறியுள்ளது. Facebook இல் உள்ள Reels Play போனஸ் Insights பக்கத்தில், கிரியேட்டர்கள் தங்களின் தகுதியான ரீல்கள் ஒவ்வொன்றும் வெகுமதிகள் எவ்வளவு, எத்தனை பார்வையாளர்களை ஈர்த்துள்ளது போன்ற தகவல்களை பெறலாம்.
Meta
நிறுவனம் பேஸ்புக்கில் உள்ள ரீல்ஸுகளில் விளம்பரங்களை வெளியிடுகிறது. பயனர்களுக்கு தேவையான விளம்பரங்களை நுண்ணறிவு மூலம் தொகுத்து வழங்குகிறது. இதன்மூலம் கூடுதல் வருவாயை ஈட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது கிரியேட்டர்களுக்கும் உதவியாக இருக்கும் என பேஸ்புக் நம்பிக்கை தெரிவித்துள்ளது.