Summer Hair care tips: உங்கள் தலைமுடிக்கு புத்துணர்ச்சி தரும் ஹோம்மேட் பெப்பர்மின்ட் ஹேர் மாஸ்க்!

கோடை வெயில் ஆரம்பித்து விட்டது. வெப்பத்தால் உங்கள் சருமம் பாதிக்கக்கூடும். எல்லாவற்றையும் விட உச்சந்தலையானது, இந்த மாதங்களில் மிகவும் ஒட்டும் தன்மையுடையதாக இருக்கும், ஏனெனில் அது அதிக வியர்வையை உண்டாக்குகிறது. இதனால், உச்சந்தலையில் துர்நாற்றம் இருக்கும். ஆனால் நீங்கள் அதை அப்படியே விட வேண்டியதில்லை, மேலும் உங்கள் தலைமுடிக்கு ஒரு புத்துணர்ச்சி தேவை.

எனவே, பெப்பர்மின்ட் இலைகளைப் பயன்படுத்தி வீட்டிலேயே நீங்கள் செய்யக்கூடிய பயனுள்ள மற்றும் எளிமையான ஹேர் மாஸ்க் இங்கே உள்ளது.

பலன்கள்

பெப்பர்மின்ட்’ எண்ணெய் பசையுள்ள உச்சந்தலையில் இருந்து எழும் துர்நாற்றத்தை நீக்குவதோடு, உங்கள் பொடுகு பிரச்சினைகளையும் இது கவனித்துக் கொள்ளும். புதினா இலை’ புத்துணர்ச்சியைக் கொடுக்கும் என்று கருதப்படுகிறது. உடல் அமைப்பை அமைதிப்படுத்தவும், செரிமானத்திற்கு உதவவும் இதை ஒரு பானமாக உட்கொள்ளலாம்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், உங்கள் தலைமுடி பராமரிப்புக்கு பெப்பர்மின்டை பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும். இது உங்கள் தலைமுடிக்கு இயற்கையாக ஊட்டமளித்து, அடர்த்தியாகவும், மென்மையாகவும் மாற்றும்.

பெப்பர்மின்ட் ஹேர் பேக்கிற்கு என்ன தேவை

* பெப்பர்மின்ட் இலைகள்

* ஒரு கிண்ணம் தயிர்

* ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை

முதலில் இலைகளை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

இலைகளை மிக்ஸியில் போட்டு, தயிர் சேர்த்து அரைக்கவும். இதில் சிறிது தண்ணீர் சேர்க்க மறக்காதீர்கள்.

பேஸ்ட் திக் கன்சிஸ்டன்சியில் இருப்பதை உறுதிப்படுத்தவும்.

அடுத்து, கலவையில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

நன்றாக அரைக்கவும். உங்கள் ஹேர் மாஸ்க் இப்போது ரெடி.

நீங்கள் அதை உங்கள் கைகளால் உச்சந்தலையிலும், முடி இழைகளிலும் நேரடியாக அப்ளை செய்யலாம்.

பிறகு 30 நிமிடம் கழித்து, மைல்ட் ஷாம்பூ பயன்படுத்தி தலைமுடியை கழுவவும்.

குறிப்பு: “எல்லாவற்றிற்கும் மேலாக, நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் சருமம் மற்றும் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு வெயிலின் தாக்கம் அல்லது சொறி ஏற்பட்டால் லாவெண்டர் அல்லது பெப்பர்மின்ட் எண்ணெய்கள் மற்றும் ஸ்ப்ரேக்கள் கைவசம் வைத்திருங்கள். அவை கூலிங் ஏஜண்டாக செயல்பட்டு உங்கள் சருமத்தை ரிலாக்ஸ் செய்யும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.