Tamil News Live Update: அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. வானிலை மையம் தகவல்!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

10 ஆம் வகுப்பு பொதுதேர்வு இன்று தொடக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.  9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.  3,936 தேர்வு மையங்களில் பொதுத்தேர்வு நடைபெறுகிறது. முறைகேடுகளை தடுக்க 3,050 பறக்கும் படைகளும், 1,241 ஸ்டாண்டிங் ஸ்குவார்டு படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு மையத்துக்கு ஆசிரியர்கள் மற்றும் தேர்வர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

IPL 2022: டெல்லி அணி அபார வெற்றி!

ஐபிஎல் போட்டியின் நேற்று, ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் – 92, ரோவ்மேன் பவல் – 67 ரன்கள் எடுத்தனர். 208 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

Tamil Nadu news live update

என்.எல்.சி ஆட்சேர்ப்பு.. முதல்வர் மோடிக்கு கடிதம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில், பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு GATE மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களைத் தேர்வு செய்யும் முடிவினை மாற்றிட வேண்டும். எதிர்காலத்தில் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் போது என்.எல்.சி நிறுவனம் தகுதித் தேர்வை நடத்த வேண்டும். என்.எல்.சி நிறுவனத்திற்காக நிலங்களை வழங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவ மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதி!

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு, உதவிட முதல்வர் பொது நிவாரண நிதிக்கு, நிதி வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.  முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, மதிமுக சார்பில், ரூ.13.15 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையை, அக்கட்சியின் தலைவர் வைகோ, நேற்று தலைமை செயலத்தில் வைத்து ஸ்டாலினிடம் வழங்கினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
10:43 (IST) 6 May 2022
8 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன்!

சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்த வழக்கில், விக்னேஷை கைது செய்த காவல் உதவி ஆய்வாளர் உட்பட 8 போலீசாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.

10:27 (IST) 6 May 2022
அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

வங்க கடலில் அந்தமான் அருகே உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரமடைந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

10:23 (IST) 6 May 2022
பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நேற்று உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 27 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நிலையில், மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10:23 (IST) 6 May 2022
தங்கம் விலை குறைவு!

சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 38,728க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,841க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

10:23 (IST) 6 May 2022
ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி!

தஞ்சாவூரில் உணவகத்தில் நேற்று ஷவர்மா சாப்பிட்ட, ஒரத்தநாடு கால்நடை கல்லூரி மாணவர்கள் 3 பேர், உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

10:22 (IST) 6 May 2022
மாணவி சிந்து மருத்துவச் செலவை அரசே ஏற்கும்!

சென்னையில் படுத்த படுக்கையாக தேர்வு எழுதிய 12ஆம் வகுப்பு மாணவி சிந்துவின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்ற அரசு உதவும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

09:30 (IST) 6 May 2022
தருமபுரம் ஆதீனம் பட்டணபிரவேசம்.. சேகர்பாபு தகவல்!

வரும் 22ஆம் தேதி நடைபெறும் தருமபுரம் ஆதீனம் பட்டணபிரவேசம் நிகழ்வு குறித்து நல்ல முடிவை முதல்வர் எடுப்பார். தருமபுரம் ஆதீனத்துடன் அறநிலையத்துறை சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் ஆன்மிகம், இறை வழிபாட்டிற்கு எதிராக கருத்து கூறவில்லை- அமைச்சர் சேகர்பாபு.

09:06 (IST) 6 May 2022
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு!

புதிய கல்விக் கொள்கை அடிப்படையில், ஒரே நேரத்தில் மாணவர்கள் 2 பட்டப்படிப்புகளை படிக்க யுஜிசி அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் ஒரே நேரத்தில் வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை படிக்கலாம் – யுஜிசி

09:06 (IST) 6 May 2022
ஓபிஎஸ் வலியுறுத்தல்!

பொதுத் தேர்வுகள் நடைபெறும்போது மின் வெட்டு ஏற்பட்டால் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைய வாய்ப்பு அதிகம். எனவே தேர்வின்போது தமிழ்நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

09:06 (IST) 6 May 2022
இந்தியாவில் 47 லட்சம் கொரோனா உயிரிழப்புகள்?

கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் 47 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்த நிலையில், இது தவறான தகவல் என்றும், இந்தியாவில் 4.81 லட்சம் கொரோனா இறப்புகள் மட்டுமே பதிவானதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

08:29 (IST) 6 May 2022
வழக்கறிஞர்களுக்கு கவுன் அணிவதிலிருந்து விலக்கு!

சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடைக்கால அமர்வுகளில், கருப்பு கோட் மற்றும் கழுத்துப் பட்டையை கட்டாயம் அணிவதிலிருந்து’ வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

08:29 (IST) 6 May 2022
இலங்கையில் கடையடைப்பு போராட்டம்!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் சூழலில், இலங்கை அரசு பதவி விலக கோரி, நாடு முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

08:25 (IST) 6 May 2022
உக்ரைன் ராணுவத்துக்கு உளவு தகவல்களை பகிர்ந்த அமெரிக்கா!

ரஷ்ய தளபதிகளை கொலை செய்ய, ரஷ்யாவின் மதிப்பு வாய்ந்த இலக்குகள் குறித்து உளவு தகவல்களை, உக்ரைன் ராணுவத்துக்கு பகிர்ந்ததாக அமெரிக்க பென்டகன் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

08:25 (IST) 6 May 2022
சட்டப்பேரவையில் இன்று!

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகிறது.

08:25 (IST) 6 May 2022
CUET நுழைவுத்தேர்வு.. தேதி நீட்டிப்பு!

மத்திய பல்கலைக்கழக CUET நுழைவுத்தேர்வு விண்ணப்பத்திற்கான காலக்கெடு, வரும் 22ஆம் தேதி வரை நீட்டித்து யுஜிசி அறிவித்துள்ளது.

08:24 (IST) 6 May 2022
மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் நன்றி!

இலங்கைப் பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டுப் பிரச்சினையாகப் பார்க்காமல், மனிதாபிமான அடிப்படையில் உதவியதற்கு, தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் இலங்கை மக்கள் சார்பாக நன்றி என மு.க.ஸ்டாலினுக்கு’ இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கடிதம் எழுதியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.