ஆண், பெண் நிர்வாணப் படங்கள் | Dinamalar

வாஷிங்டன்:வேற்று கிரகவாசிகளை கவர, விண்வெளிக்கு ஆண் மற்றும் பெண் நிர்வாணப் படங்களை அனுப்ப அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
பூமியைப் போலவே மற்ற கிரகங்களிலும் மனித இனம் இருக்கிறதா என்பது குறித்த ஆராய்ச்சி பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இதற்காக பல புதிய முயற்சிகளை விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், வேற்று கிரகவாசிகளை கவர ஆண் மற்றும் பெண்ணின் நிர்வாண படங்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

இதை படமாக அனுப்பாமல், விண்வெளியில் இரு நிர்வாண உருவங்களையும் ஒளிரச் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக இரு படங்களை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். வேற்று கிரகத்தில் மனிதர்கள் இருந்தால், இந்தப் படங்கள் அவர்களை நிச்சயம் கவரும் என நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.