இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனையை ஏற்க முடியாது.. ஆப்பிள் அறிவிப்பால் சர்ச்சை!

இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனையை ஏற்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது, வாடிக்கையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிள் ஐபோன், ஐபாட் வாடிக்கையாளர்கள் அவற்றைப் பயன்படுத்த வங்கி விவரங்களை அளித்து ஆப்பிள் ஐடி உருவாக்க வேண்டும். மேலும் ஆப்பிளின் பல்வேறு செயலிகளை கிரெடிட், டெபிட் யூபிஐ அல்லது ஆன்லைன் வங்கி சேவை மூலம் கட்டணம் செலுத்திதான் பயன்படுத்த முடியும்.

பொருளாதார வீழ்ச்சியில் தென்னாசிய நாடுகள்.. இலங்கை, நேப்பாள், பாகிஸ்தான்.. அடுத்தது யார்..?!

ஆர்பிஐ

ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் கிரெடிட், டெபிட் கார்டுகளில் இருந்து ஆட்டோ டெபிட் செய்யும் முறையில் கட்டுப்பாடுகளை வைத்தது. அதன்மூலம் ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்கள் அனுமதியுடன் தான் பணம் ஆட்டோ டெபிட் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆர்பிஐ விதித்த அந்த உத்தரவால் இனி இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனையை ஏற்கப்போவதில்லை என்ற முடிவை ஆப்பிள் எடுத்துள்ளது. ஏற்கனவே இணைக்கப்பட்ட கணக்குகளிலும் விரைவில் கிரெடிட், டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்த முடியாது என வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்துள்ளது.

மாற்று வழி என்ன?
 

மாற்று வழி என்ன?

எனவே ஆப்பிள் செயலிகள் சந்தாவைச் செலுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் இனி ஆப்பிள் ஃபண்ட்ஸ் செயலியில் பணத்தை ஏற்ற வேண்டும். யுபிஐ, இணையதள வங்கி சேவை மூலம் பணத்தை ஏற்றலாம். அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ஆப்பிள் நிறுவனம் பணத்தை பிடித்தம் செய்துகொள்ளும் என கூறப்படுகிறது.

புகார்கள்

புகார்கள்

பல ஆப்பிள் போன் வாடிக்கையாளர்கள் தங்களது ஆப்பிள் ஐடியில் பிழை ஏற்பட்டுள்ளது. சந்த கட்டணங்களைச் செலுத்த முடியாமல் உள்ள என புகார்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

டேப் டூ பே

டேப் டூ பே

பிப்ரவரி மாதம் ஐபோனில் டேப் டூ பே என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது. அதன் மூலம் ஐபோனை பயன்படுத்தி ஆட்டோ பேமெண்ட் பரிவத்தனையைச் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது. வைஃபை ஆர்டு வசதி உள்ள பிஓஎஸ் இயந்திரங்களில் ஐபோனை டேப் செய்து பணத்தைச் செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் இவற்றுக்கு ஆப்பிள் ஃபண்ட்ஸ் செயலியில் பணம் இருக்க வேண்டும்

பிரச்சனை

பிரச்சனை

ஆப்பிள் ஃபண்ட்ஸில் பணத்தைக் குறைந்தது 5000 ரூபாய் முதல் சேர்க்க முடியும் என்பது வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சமுக வலைத்தளங்கள் மூலம் ஆப்பிள் வாடிக்கையாளர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Apple Stops Accepting Credit Or Debit Card Payments In India

Apple Stops Accepting Credit Or Debit Card Payments In India | இந்தியாவில் கிரெடிட், டெபிட் கார்டு பரிவர்த்தனையை ஏற்க முடியாது.. ஆப்பிள் அறிவிப்பால் சர்ச்சை!

Story first published: Saturday, May 7, 2022, 16:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.