இலங்கையில் நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்பில் வெளியான விசேட அறிக்கை (Photos)


மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவுமே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை தொடர்பில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும், தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி.
குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளுடன் கூடிய பல காரணிகளின் விளைவாக ஒட்டுமொத்தமாக சுதந்திரத்தின் பின்னர் இலங்கை தற்போது மோசமான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மையை எதிர்கொண்டுள்ளது.

இதை முறியடிக்க, நமது அரசியல், பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பில் தொடர்ச்சியான ஆழமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவசர காலச் சட்டம் என்றால் என்ன…! அதன் ஆபத்துக்களும் விளக்கங்களும் – ஒரு மீள் பார்வை 

இதேவேளை, பல நாட்களாக, தலைநகர் உட்பட நாடு முழுவதும் ஆவேசமான போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. புகையிரதம் மற்றும் பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அன்றாட பணிகள் முடங்கியதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

ஆடைத் தொழில் உள்ளிட்ட உற்பத்தித் துறையில் பணிகள் அவ்வப்போது முடங்கிக் கிடக்கின்றன. குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள் வேலைக்குச் செல்வதில் சிரமப்படுகிறார்கள்.

மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதுடன், இந்தப் போராட்டங்கள் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்துகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.