கற்கால உணவுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதே பேலியோ டயட். இதை `பேலியோலித்திக் டயட் (Paleolithic Diet)’, `கற்கால டயட்’ என்றும் அழைப்பர்.
பேலியோ டயட்டை மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் தொடங்குவது நல்லது.
நன்மைகள்: ஃபிரெஷ்ஷான காய்கறிகளைச் சாப்பிடுவதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். செடிகளில் உள்ள ஆன்டி-இன்ஃப்ளேமேட்டரி எனும் நன்மை தரும் பொருள் கிடைக்கும்.
`ரெட் மீட்’ எனப்படும் ஆடு, மாட்டிறைச்சி உண்பதால், உடலில் அதிகளவு இரும்புச்சத்து சேரும். புரதம், நல்ல கொழுப்பு சாப்பிடுவதால் திருப்தியான உணர்வு ஏற்படும்.
குறைந்த உணவு வகைகளை உண்பதால், உடல் எடை குறையும். இன்சுலின் சுரப்பைத் தூண்டி, சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். சர்க்கரைநோய் இருப்பவர்களுக்கு தீவிரமடையாமல் பார்த்துக்கொள்ளும்.
புற்றுநோய், சர்க்கரை மற்றும் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புக் குறையும்.
சாப்பிடவேண்டிய உணவுகள்: கேரட், கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், கத்திரிக்காய், பச்சை வெங்காயம், குடமிளகாய் போன்ற காய்கறிகள் மற்றும் அவகேடோ, எலுமிச்சை.
பாதாம் பருப்பு, பூசணி விதை, சூரியகாந்தி விதை, வால்நட், மற்றும் முந்திரி, ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் ஆளி விதை எண்ணெய்.
தாவரம் உண்ணும் விலங்கு – பறவைகளின் இறைச்சி: கோழி, வான்கோழி, பன்றி, இறால், முயல் கறி, ஆடு, ஈமு கோழி, வாத்து மற்றும் காடை. கடல் வாழ் உயிரினங்களான மத்தி, வாளை, நண்டு, இறால், சிப்பி மீன் போன்றவை.
தவிர்க்கவேண்டிய உணவுகள்: பால் சார்ந்த உணவுகளான சீஸ், தயிர், வெண்ணெய், ஐஸ்க்ரீம், இனிப்பு பதார்த்தங்கள்.
பழச்சாறு வகைகளான ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், மாம்பழ ஜூஸ். செயற்கை சேர்க்கைகளான பிரிசர்வேட்டிவ்ஸ், செயற்கை சுவையூட்டிகள்.
பிரெட், ஓட்ஸ், தானியங்கள், கோதுமை மற்றும் சோளம், சோயாபீன்ஸ், பட்டாணி, வேர்க்கடலை.
உப்பு பதார்த்தங்கள், இயற்கை இனிப்பூட்டிகள், ஸ்நாக்ஸ் வகைகளான சிப்ஸ், பிஸ்கெட்ஸ், ஊட்டச்சத்து பானங்கள், மது, இனிப்பு வகைகள்.