மும்பையில் உள்ள ஜியோ வர்ல்டு சென்டரில் உலகின் மிகப் பெரிய எலிவேட்டரை நிறுவியுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
மும்பையின் ஒரு முக்கிய அடையாளமாக 18.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது ஜியோ வர்ல்டு சென்டர். இங்குதான் உலகின் மிகப் பெரிய எலிவேட்டரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பெரும் பொருட் செலவில் நிறுவியுள்ளது.
விஜய் முதல் நயன்தாரா வரை.. யார் யார் என்ன சைட் பிஸ்னஸ் செய்கிறார்கள் தெரியுமா..?!
200 பேரை தூக்கும்
உலகின் மிகப் பெரிய இந்த எலிவேட்டரில் ஒரே நேரத்தில் 200 பேர் வரை செல்ல முடியும். கிட்டத்தட்ட ஒரு 25.78 சதர மீட்டர் பெட் ரூம் அளவிற்கு இந்த எலிவேட்டரின் உட்புறம் உள்ளது.
6 வருட உழைப்பு
பின்னிஷ் நிறுவனம் கோன் உதவியுடன், ரிலையன்ஸ் நிறுவன இந்த எலிவேட்டரை நிறுவ 6 வருடங்கள் எடுத்துக்கொண்டுள்ளது. எலிவேட்டரின் அளவு இவ்வளவு பெரியது என்றால், அதற்கான மெஷின் அளவு அதைவிட பெரியது. ஏற்கனவே இதே போல லண்டனில் ஒரு பெரிய எலிவேட்டரை நிறுவியுள்ளதால் எங்களுக்கு இதை மும்பையில் அமைப்பது சற்று எளிமையாக இருந்தது என கோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பாக இருக்குமா?
எலிவேட்டர், லிப்ட் போன்றவற்றில் செல்லும் போது அவை பழுதானால் உள்ளே இருப்பவர்கள் பதற்றமடைவார்கள். இந்த எலிவேட்டரை மிகவும் சிரமப்பட்டு நிறுவியிருந்தாலும், உலகத் தரத்தில், கலைநயத்துடன் பாதுகாப்புக்கு முக்கியத்துவத்துடனும் நிறுவியுள்ளதாகக் கூறுகின்றனர். இருந்தாலும் இந்தியாவின் காலநிலைக்கு ஏற்றவாறு எப்படி செயல்படும் என்பதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விலை எவ்வளவு?
உலகின் மிகப் பெரிய எலிவேட்டர் இது என கூறப்படுவதால், இதை நிறுவ எவ்வளவு என கேட்க தூண்டும். ஆனால் இது பல கோடி மதிப்பிலான திட்டம். எவ்வளவு என சொல்ல முடியாது என ரிலையன்ஸ், கோன் என இரண்டு நிறுவனங்களும் மறுத்துவிட்டன.
எலிவேட்டர் வரலாறு
உலகின் முதல் எலிவேட்டர் 1857-ம் ஆண்டு நியூயார்க் பிராட்வேவில் உள்ள ஒரு 5 மாடி ஹோட்டலில் நிறுவப்பட்டது. அதிலிருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் முதல் எலிவேட்டர் 1892-ம் ஆண்டு கொல்கத்தா ராஜ்பவனில் நிறுவப்பட்டது. இப்போது 222 வருடங்களுக்குப் பிறகு உலகின் மிகப் பெரிய எலிவேட்டர் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Reliance Industries installs world’s largest elevator in Jio World Centre Mumbai
Reliance Industries installs world’s largest elevator in Jio World Centre Mumbai | உலகின் மிகப் பெரிய லிப்ட்.. அம்பானியின் புதிய சாதனை!