எச்.டி.எப்.சி வீட்டுக் கடன் வட்டி விகிதம் மே 9 முதல் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் மிகப் பெரிய அடைமான கடன் வழங்கும் நிறுவனமான எச்.டி.எப்.சி சில்லறை முதன்மை கடன் வட்டி விகிதத்தை (RPLR) மே 9-ம் தேதி முதல் 0.30% அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

சில்லறை முதன்மை கடன் விகிதத்தை (RPLR) பொருத்துதான் மதிவை வட்டியில் வீட்டுக் கடன் வாங்கிய்வர்களின் வட்டி விகிதங்கள் மாறும். இப்போது அது உயர்ந்துள்ளதால் வீட்டுக் கடன் (Home Loans) வாங்கிவர்களின் ஈ.எம்.ஐ உயரும்.

முகேஷ் அம்பானியும் சந்திரசேகரனும் இனி பக்கத்து வீட்டுக்காரர்கள்! புதிய வீட்டின் விலை என்ன தெரியுமா?!

எவ்வளவு உயரும்?

எவ்வளவு உயரும்?

 

வரம்பு பிரிவு வேலை / சுயதொழில் செய்பவர்கள்    
    புதிய வட்டி விகிதம் பழைய வட்டி விகிதம் மாற்றம்
கிரெடிட் ஸ்கோர் 750+ இருப்பவர்களுக்கு   7 6.7 0.3
30 லட்சம் வரை பெண்கள் 7.05 6.75 0.3
  பிறர் 7.1 6.8 0.3
30-க்கு மேல் 75 லட்சத்திற்குள் பெண்கள் 7.3 7 0.3
  பிறர் 7.35 7.05 0.3
75 லட்சத்திற்கு மேல் பெண்கள் 7.4 7.1 0.3
  பிறர் 7.45 7.15 0.3

ஏன்?

ஏன்?

எச்.டி.எப்.சி லிமிடெட், மே 2-ம் தேதி அதன் முக்கிய கடன் விகிதத்தினை 5 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.5% உயர்த்தியது. இதனால் ஏற்கனவே கடன் வாங்கியவர்களின் மாத தவணை அதிகரிக்கும்.

பிற வங்கிகள்

பிற வங்கிகள்

ஆர்பிஐ ரெப்போ வட்டி விகித்தை மே 5-ம் தேதி 0.40% உயர்த்தி 4.4 சதவீதமாக அறிவித்தது. அதனை தொடர்ந்து எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா வங்கிகளும் தங்களது கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதங்களை உயர்த்தி அறிவித்துள்ளன.

எச்.டி.எப்.சி - எச்.டி.எப்.சி வங்கி இணைப்பு
 

எச்.டி.எப்.சி – எச்.டி.எப்.சி வங்கி இணைப்பு

ஏப்ரல் 4-ம் தேதி எச்.டி.எப்.சி வங்கியுடன் எச்.டி.எப்.சி கடன் நிறுவனத்தை இணைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் இரு நிறுவனங்கள் இணைந்து ஒன்றாக செயல்படும். எச்.டி.எப்.சி-க்கு எச்.டி.எப்.சி வங்கியில் 41 சதவீத பங்குகள் வழங்கப்படும்.

பங்குச்சந்தை நிலவரம்

பங்குச்சந்தை நிலவரம்

எச்.டி.எப்.சி – எச்.டி.எப்.சி வங்கி இணைப்பு அறிவிப்பை தொடர்ந்து இரண்டு நிறுவன பங்குகளும் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறன. வெள்ளிக்கிழமை சந்தை நேர முடிவில் எச்.டி.எப்.சி வங்கி பங்குகள் 35.10 புள்ளிகள் சரிந்து 1,317.60 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

எச்.டி.எப்.சி லிமிட்டட் பங்குகள் 35.10 புள்ளிகள் சரிந்து 1,317.60 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: hdfc home loan

English summary

HDFC revised Retail Prime Lending Rate on housing loans by 0.30 Percent from May 9

HDFC revised Retail Prime Lending Rate on housing loans by 0.30 Percent from May 9 | எச்.டி.எப்.சி வீட்டுக் கடன் வட்டி விகிதம் மே 9 முதல் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

Story first published: Saturday, May 7, 2022, 15:48 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.