எல்ஐசி ஐபிஓ: 4வது நாள் முடிவில் என்ன நிலவரம் தெரியுமா..?!

இந்தியா மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஐபிஓ-வின் 4வது நாள் முடிவில் சுமார் 1.66 மடங்கு பங்குகளுக்கு முதலீடு குவிந்துள்ளது.

மத்திய அரசின் கோரிக்கை பேரில் தேசிய பங்குச்சந்தை சனிக்கிழமையும் ஐபிஓ-வில் முதலீடு செய்ய அனுமதி அளித்த நிலையில் நான்காவது நாளான மே 7 தேதியன்று எல்ஐசி விற்பனை செய்ய உள்ள 16.2 கோடி பங்குகளுக்கு எதிராக 26.83 கோடி பங்குகளுக்கு முதலீடு குவிந்துள்ளது.

மேலும் எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மே 9ஆம் தேதி அதாவது திங்கட்கிழமை உடன் முடிகிறது.

எல்ஐசி ஐபிஓ-வில் ஆர்வம் காட்டாத அனுபவ முதலீட்டாளர்கள்.. என்ன காரணம்?

எல்ஐசி பங்கீடு

எல்ஐசி பங்கீடு

இன்றைய ஐபிஓ வர்த்தக முடிவில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு 1.46 மடங்கும், எல்ஐசி ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு 3.54 மடங்கும், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கு 4.67 மடங்கும், QIB ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில் 67 சதவீத பங்குகளையும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் 108 சதவீத அளவில் முதலீடு செய்துள்ளனர்.

QIB பிரிவு பங்குகள்

QIB பிரிவு பங்குகள்

எல்ஐசி ஐபிஓ-வில் மிகப்பெரிய வெற்றியாக எல்ஐசி ஊழியர்கள் மற்றும் பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகள் அதிகளவிலான முதலீட்டை பெற்ற நிலையில், QIB பிரிவு இன்னும் முழுமையான முதலீட்டைப் பெறாதது ரீடைல் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ப்ரீமியம்
 

ப்ரீமியம்

2021ஆம் நிதியாண்டில் புதிய லைப் இன்சூரன்ஸ் வர்த்தகத்தில் மூலம் எல்ஐசி நிறுவனம் சுமார் 184,175 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்று உள்ளது. எல்ஐசி நிறுவனத்தைத் தொடர்ந்து எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் 2வது இடத்தில் 20,626 கோடி ரூபாயை ப்ரீமியமாகப் பெற்றுள்ளது. 3வது இடத்தில் ஹெச்டிஎப்சி லைப் 20,243 கோடி ரூபாயை ப்ரீமியமாகப் பெற்றுள்ளது.

CAGR வளர்ச்சி

CAGR வளர்ச்சி

இதன் மூலம் எல்ஐசி நிறுவனம் லைப் இன்சூரன்ஸ் பிரிவில் எல்ஐசி நிறுவனம் சுமார் 73.3 சதவீத சந்தை வர்த்தகத்தை அடைந்துள்ளது. ஆனால் CAGR அளவீட்டில் எல்ஐசி நிறுவனம் 10 வருடத்தில் சராசரியாக 8 சதவீதமாக உள்ளது. ஆனால் எஸ்பிஐ லைப் 11 சதவீதமும், ஹெச்டிஎப்சி 17 சதவீதமும், மேக்ஸ் வைப் 13 சதவீதமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC IPO: On Day 4 Issue gets subscription of 1.66 times; Still QIBs 67%

LIC IPO: On Day 4 Issue gets subscription of 1.66 times; Still QIBs 67% எல்ஐசி ஐபிஓ: 4வது நாள் முடிவில் என்ன நிலவரம் தெரியுமா..?!

Story first published: Saturday, May 7, 2022, 22:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.