எல்&டி இன்போடெக் – மைண்ட்ட்ரீ இணைவார்களா? விரைவில் வரவிருக்குக்கும் அறிவிப்பு!

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கட்டுமானம் நிறுவனம் லேரசன் & டூப்ரோ கட்டுப்பாட்டில் உள்ள எல்&டி இன்போடெக், மைண்ட்ட்ரீ நிறுவனங்கள் விரைவில் இணையும் அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் எல்&டி நிறுவனம் வெள்ளிக்கிழமை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு அழைப்பு விடுத்து இருந்தது. அதில் எல்&டி குழும தலைவர் என ஊடகங்களுடன் பேசுவார் என தெரிவிக்கப்பட்டது. எனவே அது எல்&டி இன்போடெக் – மைண்ட்ட்ரீ இணைவு குறித்த அறிவிப்பிற்காக இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு ஏற்படுகிறதா என்ற சந்தேகம் எழுத்துள்ளது.

டிரில்லியன் பொருளாதாரம்.. முக.ஸ்டாலின் கனவு திட்டம்.. ஒரு ஆண்டு சாதனை என்ன..?

லேரசன் & டூப்ரோ

லேரசன் & டூப்ரோ

எல்&டி இன்போடெக் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளும், மைண்ட்ட்ரீ நிறுவனத்தின் 61 சதவீத பங்குகளும் லேரசன் & டூப்ரோ நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. எனவே இரண்டு நிறுவனங்களும் இணைவது குறித்து அவ்வப்போது பேச்சுவார்த்தையை நடத்துகின்றன. எப்போது வேண்டுமானாலும் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

சந்தை மூலதனம்

சந்தை மூலதனம்

எல்&டி இன்போடெக் நிறுவனத்திடம் 1.03 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனமும், மைண்ட்ட்ரீ நிறுவனத்திடம் 65,285 கோடி ரூபாய் சந்தை மூலதனமும் உள்ளது. இவ்விரண்டு நிறுவனங்களும் இணைந்தால் டெக் மஹிந்தரா நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி இந்தியாவின் 5-ம் மிகப் பெரிய ஐடி நிறுவனமாக எல்&டி இன்போடெக் உருவாகும். இரண்டு நிறுவனங்களிலும் மொத்தமாக 80 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இணைந்தால் என்ன லாபம்?
 

இணைந்தால் என்ன லாபம்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்&டி இன்போடெக் – மைண்ட்ட்ரீ என இரண்டு நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. இரண்டு நிறுவனங்களும் இணைந்தால் வணிகம் இன்னும் விரிவடையும், செலவு மற்றும் ரிஸ்க் குறையும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

யார் அடுத்த சி.ஈ.ஓ

யார் அடுத்த சி.ஈ.ஓ

அதுமட்டுமல்லாமல் இரண்டு நிறுவனங்கள் இணையும் போது எல்&டி இன்போடெக் தலைவர் சஞ்சய் ஜலோனா அல்லது மைண்ட்ட்ரீ தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் டெபாஷிஸ் சாட்டர்ஜி என யார் தலைமையில் இந்த நிறுவனம் செயல்படும் என்பதும் கேள்வியாக உள்ளது. இவற்றுக்கு எல்லாம் இணைவு அறிவிப்பிற்கு பிறகே ஒரு நல்ல முடிவு வரும்.

பங்குகள்

பங்குகள்

இன்றைய சந்தை நேர முடிவில் எல்&டி இன்போடெக் பங்குகள் 173.45 புள்ளிகள் சரிந்து 4,593.10 புள்ளிகளாகவும், மைண்ட்ட்ரீ பங்குகள் 136.25 புள்ளிகள் சரிந்து 3,374.65 ரூபாயாகவும் வர்த்தகமாகி இருந்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Soon L&T Infotech May Merge With Mindtree

Soon L&T Infotech May Merge With Mindtree | எல்&டி இன்போடெக் – மைண்ட்ட்ரீ இணைவார்களா? விரைவில் வரவிருக்குக்கும் அறிவிப்பு!

Story first published: Friday, May 6, 2022, 18:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.