சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள வேனல்ஸ் சாலையின் பெயரை மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பூந்தமல்லி நெடுஞ்சாலை என்று அழைக்கப்படும் ஈ.வெ.ரா பெரியார் சாலையில், எழும்பூர் பகுதியில் வேனல்ஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் மணியம்மையார் சிலை உள்ள காரணத்தால் இந்த சாலையின் பெயரை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன செயலாளர் கி.வீரமணி சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தார். ‘
இந்நிலையில் இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக இந்த சாலையின் பெயரை மாற்றம் செய்ய அனுமதி அளித்தது. இதன்படி வேனல்ஸ் சாலையின் பெயரை அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் சாலை என்று மாற்றி நகராட்சி நிர்வாக துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.