ஐபிஎல் 2022 – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி

மும்பை:
பிஎல் 2022 – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராஜ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்தது. இந்த அணியில் கிஷான், ரோகித் சர்மா, டிம் டேவிட் ஆகியோர் முறையே 43, 45, 44 ரன்கள் அடித்தனர். 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய குஜராத் அணி 172 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

ஐபிஎல் தொடரில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகளும், இரவு 7.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் லக்னோ – கொல்கத்தா அணிகளும் மோத உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.