இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர தன் உறவினரான இளம்பெண் ஒருவருக்கு உதவிய இலங்கையர் ஒருவரே, வேலையே பயிரை மேய்ந்த கதையாக, அந்த பெண்ணை பலமுறை சீரழித்ததாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
Kamloopsஇல் வாழும் Nihal Maligaspe (71), தன் உறவினரான Dinushini Maligaspe என்ற இளம்பெண் இலங்கையிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர உதவியுள்ளார்.
Dinushini 2002ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை Nihal குடும்பத்துடன் தங்கியிருந்து கனேடிய குடியுரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, பல முறை அவரிடம் அத்துமீறியுள்ளார் Nihal.
தற்போது 40 வயதாகும் Dinushini, தான் Nihal குடும்பத்துடன் தங்கியிருக்கும்போது, அவர் தன்னை மாதம் ஒன்றிற்கு 15 முறை வரை பாலியல் ரீதியில் தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். பின்னர் அவரது வீட்டிலிருந்து வெளியேறிய Dinushini கால்கரிக்குக் குடிபெயர்ந்துள்ளார்.
Nihal மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்றத்துக்கு வரும்போது தவிர்த்து மற்றபடி Dinushiniயை அவர் அணுகக்கூடாது என்றும், அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டு, அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இனி தனது வீட்டில் வெளிநாட்டு மாணவர்கள் யாரையும் தங்க அனுமதிக்கக்கூடாது என்றும் Nihalக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இம்மாதம் (மே) 16ஆம் திகதி மீண்டும் Nihal நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலையில், அன்று அவருக்கு தீர்ப்பு வழங்கப்படும் திகதி குறித்து அறிவிக்கப்பட உள்ளது.