காட்டு ராஜாவை குச்சியை காட்டி ஓடவைத்த நபர் – வைரல் வீடியோ

சமீப காலங்களாக விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில், சிங்கம் வேட்டையாடும் பல வீடியோக்களை பார்த்திருப்பீர்கள் ஆனால், குச்சியுடன் வரும் நபரை கண்டு சிங்கம் பயந்து ஓடுவதை பார்த்ததுண்டா? அத்தகைய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இந்த வீடியோ, ‘animals_powers’ என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதற்கு, ‘Lion scared by man’ என கேப்ஷன் பதிவிட்டுள்ளனர்.

வீடியோவில், கைகளில் குச்சியுடன் ஒருவர் காட்டில் சிங்கத்தை விரட்டிச் செல்வதை காணமுடிகிறது. தன்னை நோக்கி வரும் நபரைப் பார்த்தவுடன் சிங்கம் பயந்து அங்கும் இங்கும் ஓடத் தொடங்குகிறது.

அதேசமயம், வீடியோவை பகிரும் சிலர், இது போலியானது எனவும், செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் சிங்கம் போல் தெரிவதாக கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகளையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.

நீங்கள் வீடியோவை பார்க்கும் போது என்ன நினைக்கீறர்கள்?


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.