குறைந்த வட்டி விகிதத்தில் ‘ஹோம் லோன்’ வழங்கும் 5 வங்கிகள்!

ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா மே 4-ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சதவீதம் என்ன 4 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது.

ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் ஹோம் லோன் வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தி அறிவித்து வருகின்றன. பல வங்கிகள் ஹோம் லோன் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளதால், குறைந்த வட்டி விகிதத்தில் ஹோம் லோன் வழங்கும் நிறுவனங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

8 மாதத்தில் 44.73 பில்லியன் டாலர் மாயம்.. ரிசர்வ் வங்கி அடுத்தது என்ன செய்யும்..?!

பாங்க் ஆப் மகாராஷ்டிரா

பாங்க் ஆப் மகாராஷ்டிரா

பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி குறைந்தபட்சம் 6.4 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 7.8 சதவீதம் வரையில் ஹோம் லோன் வழங்குகிறது.

பஞ்சாப் & சிந்த் வங்கி

பஞ்சாப் & சிந்த் வங்கி

பஞ்சாப் & சிந்த் வங்கி குறைந்தது 6.5 சதவீதத்திலிருந்து 7.35 சதவீதம் வரையில் ஹோம் லோன் வழங்குகிறது.

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியா

பாங்க் ஆப் இந்தியியா வங்கி குறைந்தபட்சம் 6.5 சதவீதத்திலிருந்து அதிகபட்சம் 8.2 சதவீதம் வரையில் ஹோம் லோன் வழங்குகிறது.

 பஞ்சாப் நேஷ்னல் வங்கி
 

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி குறைந்தது 6.5 சதவீதத்திலிருந்து 7.65 சதவீதம் வரையில் ஹோம் லோன் வழங்குகிறது.

கோடாக் மஹிந்தரா வங்கி

கோடாக் மஹிந்தரா வங்கி

கோடாக் மஹிந்தரா வங்கி குறைந்தது 6.6 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதம் வரையில் ஹோம் லோன் வழங்குகிறது.

அட்டவணை

வங்கி பெயர் RLLR குறைந்தபட்ச வட்டி விகிதம் அதிகபட்ச வட்டி விகிதம்
பாங்க் ஆப் மகாராஷ்டிரா 6.80% 6.40% 7.80%
பஞ்சாப் & சிந்த் வங்கி 6.60% 6.50% 7.35%
பாங்க் ஆப் இந்தியா 6.85% 6.50% 8.20%
பஞ்சாப் நேஷ்னல் வங்கி 6.50% 6.50% 7.65%
கோடாக் மஹிந்தரா வங்கி 6.60% 6.60% 7.10%

RLLR என்றால் என்ன?

RLLR என்றால் என்ன?

ரெப்போ வட்டி விகிதத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டங்கள் வட்டி விகிதத்தை வங்கிகளில் RLLR என அழைக்கின்றனர். ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால், RLLR வட்டி விகிதம் குறைந்து கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் குறையும். அதுவே ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் RLLR வட்டி விகிதம் உயர்ந்து கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் அதிகரிக்கும்.

யாருக்கு குறைந்த வட்டியில் ஹோம் லோன் கிடைக்கும்?

யாருக்கு குறைந்த வட்டியில் ஹோம் லோன் கிடைக்கும்?

சொந்தமாகத் தொழில் செய்பவர்களை விட மாதம் சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் ஹோம் லோன் கிடைக்கும். அதுவும் பெண்களாக இருந்தால் அவர்கள் பெயரில் வாங்கும் போது குறைந்தபட்ச வட்டி விகிதத்தில் ஹோம் லோன் வாங்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Top 5 Banks Giving Home loan In Lowest Interest Rates

Top 5 Banks Giving Home loan In Lowest Interest Rates | குறைந்த வட்டி விகிதத்தில் ‘ஹோம் லோன்’ வழங்கும் 5 வங்கிகள்!

Story first published: Saturday, May 7, 2022, 22:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.