கூவிக் கூவி முதலீட்டை திரட்டும் எலான் மஸ்க்.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!

தொட்டது எல்லாம் தங்கமாகும் கைகளைக் கொண்ட எலான் மஸ்க் நிறுவனம் ஏற்கனவே டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் உட்பட 5 நிறுவனங்களை நிர்வாகம் செய்து வரும் நிலையில் டெக் மற்றும் சமுக வலைத்தளத்தில் தனக்கு இருக்கும் ஆர்வ மிகுதியில் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார்.

அதுவும் சந்தை விலையை விடவும் 40 சதவீத ப்ரீமியம் விலையில் கைப்பற்றுவதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

எலான் மஸ்க்-ன் பிரம்மாண்ட முதலீட்டாளர் கூட்டணி.. வியப்பில் டெக் உலகம்..!

பல பிரச்சனை

பல பிரச்சனை

ஆனால் இப்போது டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான நிதியைத் திரட்டுவதில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். எலான் மஸ்க்-ன் நிலை எந்த அளவிற்கு மோசமாகியுள்ளது என்பதை நீங்களே பாருங்கள்.

 46.5 பில்லியன் டாலர் ரெடி

46.5 பில்லியன் டாலர் ரெடி

எலான் மஸ்க்-ன் 44 பில்லியன் டாலர் ஆஃபரை டிவிட்டர் நிர்வாகக் குழு ஏற்றுக்கொண்ட நிலையில், தன்னிடம் டீலுக்குத் தேவையான 46.5 பில்லியன் டாலர் பணமும் தயார் என்று வெளிப்படையாக அறிவித்துச் சந்தை எதிர்பார்ப்புகளை அதிகரித்தார். ஆனால் அதன் பின்பு நடந்தது தான் பெரிய கதை.

டெஸ்லா பங்குகள்
 

டெஸ்லா பங்குகள்

முதலில் எலான் மஸ்க் தன்னிடம் இருக்கும் டெஸ்லா பங்குகளில் 25 சதவீதம் விற்பனை செய்து முதலீட்டா திரட்ட முடிவு செய்தார், ஆனால் இந்த அறிவிப்பு மூலம் டெஸ்லா பங்குகள் அதிகளவிலான சரிவை பதிவு செய்தது. இதனால் திடீரென முடிவை மாற்றி 4.0 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை மட்டுமே விற்பனை செய்தார்.

 கட்டாயம்

கட்டாயம்

இதனால் வெளி சந்தையில் இருந்தும், முதலீட்டாளர்களிடம் இருந்தும் முதலீட்டை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் மூலம் ஆரக்கிள் நிறுவனத்தின் துணை நிறுவனரான லேரி எலிசன், கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான பினான்ஸ், சொத்து மேலாண்மை நிறுவனமான ஃபிடிலிட்டி, புரூக்ஃபீல்ட் மற்றும் சிகோயா கேபிடல் ஆகிய நிறுவனத்திடம் இருந்து சுமார் 7.14 பில்லியன் டாலர் தொகை திரட்டியுள்ளார் எலான் மஸ்க்.

வாடிக்கையாளர் எண்ணிக்கை

வாடிக்கையாளர் எண்ணிக்கை

ஆனாலும் முதலீடு போதா நிலையில் எலான் மஸ்க் முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற வேண்டும் என்பதற்காக 2025க்குள் டிவிட்டர் வாடிக்கையாளர் எண்ணிக்கை 2 மடங்கு உயர்த்தி 500 மில்லியனாக உயர்த்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முதலீட்டு மதிப்பு

முதலீட்டு மதிப்பு

இதுமட்டும் அல்லாமல் இப்போது டிவிட்டரை வாங்க பணத்தைக் கொடுத்து உதவி செய்தால் உங்கள் முதலீட்டு மதிப்பு 2 முதல் 4 மடங்கு வரையில் உயரும் எனவும் கூறியுள்ளார். இது சற்று கூடுதலான அளவாகவும் நம்ப முடியாத அளவாகவும் உள்ளது என்றும், எலான் மஸ்க் முதலீட்டை ஈர்ப்பதற்காக வாக்குறுதிகளை அள்ளிவிடுகிறார் என்ற விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk promises investors to double or triple their money in twitter buyout

Elon Musk promises investors to double or triple their money in twitter buyout கூவி கூவி முதலீட்டை திரட்டும் எலான் மஸ்க்.. கடைசில இப்படி ஆகிடுச்சே..!

Story first published: Saturday, May 7, 2022, 18:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.