சதீஷ் ஜோடி ஆனார் மோனிகா சின்னகொட்லா
காமெடி நடிகர்கள் ஹீரோவாகும் சீசனில் தற்போது சதீசும் ஹீரோவாக நடித்து வருகிறார். நாய்சேகர் படத்தில் ஹீரோவாக நடித்த சதீஷ் தற்போது தலைப்பிடப்படாத படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜீவி, தோழர் வெங்கடேஷ், டைம் இல்லை. தொட்டு விடும் தூரம் படங்களில் நடித்த மோனிகா சின்னகொட்லா நடிக்கிறார்.
சதீசுடன் மற்றொரு ஹீரோவாக காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்த சுரேஷ் ரவி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மானசா சவுத்ரி நடிக்கிறார். பாலாஜி மோகன் உதவியாளர் பிரவீன் சரவணன் இயக்குகிறார். விஷ்ணுஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். கருணாகரன், ஐஸ்வர்யா தத்தா, புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.