சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பை காப்பி அடிக்கவில்லை : விதார்த்

2019ம் ஆண்டு சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'விக்ருதி' படம் 'பயணிகள் கவனிக்கவும் என்ற பெயரில் தமிழில் ரீமேக் ஆகி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் விதார்த் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கிறார். இது அவருக்கு பாராட்டுகளை குவித்து வருகிறது.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் விக்ருதி படத்தை பார்த்திருக்கிறேன். விக்ருதியில் சுராஜ் நடிப்பை அப்படியே கொண்டுவர வேண்டும் என நான் நினைக்கவில்லை. மாறாக, நம்மோடு உலவும் மனிதர்களை அப்படியே திரையில் யதார்த்தமாக கொண்டு வர வேண்டும என தான் நினைத்தேன்.

சிறுவயதிலேயே என் அப்பாவின் நண்பர் சீனிவாசன் என்பவரை நான் பார்த்திருக்கிறேன். அவர் காது கேட்க முடியாத, வாய் பேச முடியாதவர். அவருடைய குரலைக் கேட்டு பழகியிருக்கிறேன். நான் உணர்ந்த ஒரு விஷயத்தை முழுமையாக செய்ய வேண்டும் என நினைத்தேன். ரீமேக் படம் என்றாலே, நடிப்பில் ஒப்பீடு வரும். அதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. அதை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.

தற்போது ஜெயம் ராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த சுப்புராம் இயக்கத்தில் அஞ்சாமை என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். லைகா நிறுவனத்தின் சார்பில் யோகிபாபுவுடன் இணைந்து ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். சாட்டை இயக்குநர் அன்பழகனுடன் இணைந்து ஒருபடமும், சற்குணத்துடன் இணைந்து படமும் நடித்து வருகிறேன். வரிசையாக நான்கைந்து படங்கள் நடித்து கொண்டிருக்கிறேன். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.