கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக லிவிங் டு கெதர் ரிலேசன்ஷிப்பில் இருக்கும் நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
தொடர்ந்து, ஆன்மிகப் பயணத்திலிருக்கும் இந்த ஜோடி, கடந்த வாரம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம் ரிலீசானபோது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இன்று காலை மீண்டும் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
வி.ஐ.பி தரிசனத்தில் சாமியை வழிபட்ட இருவருக்கும், தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. கோயிலில் இருந்து வெளியே வந்த நயன்தாராவுடன் ரசிகர்கள் செல்ஃபி எடுத்துகொண்டனர். இதனிடையே, இருவரும் தங்களது திருமணத்தை திருப்பதியில் நடத்தப் போவதாகவும், அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஜூன் 9-ம் தேதி திருமண தேதியைக் குறித்திருப்பதாக திருப்பதியில் அவர்கள் பார்வையிட்ட மடத்திலிருந்து தகவல்கள் வருகின்றன. ஆனால், நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து அவர்களின் திருமண தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.