பராக் அகர்வால் மனைவிக்கு இப்படியொரு நெருக்கடியா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!

ஒருபக்கம் டிவிட்டரைக் கைப்பற்றுவதில் ஏன் தாமதம் எனச் சில முதலீட்டாளர்கள் எலான் மஸ்க்-ஐ குடைந்து வரும் நிலையில், எலான் மஸ்க் தனது டெஸ்லா பங்கு இருப்புக்கு எவ்விதமான பாதிப்பும் வரக் கூடாது என்பதில் குறியாய் இருக்கும் காரணத்தால் பல முன்னணி நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களிடம் பணத்தைத் திரட்டி வருகிறார்.

இந்த முயற்சியில் தான் டிவிட்டர் நிறுவனத்தின் இப்போதைய சிஇஓ-வான பராக் அகர்வால்-ன் மனைவி வினிதா அகர்வாலா முக்கியப் பதவி வகிக்கும் நிறுவனம் எலான் மஸ்கிற்கு உதவிட முடிவு செய்துள்ளது.

கடைசியில் பராக் அகர்வாலின் சிஇஓ பதவி போக அவரது மனைவியே ஒரு காரணமாக உள்ளார்.

டிவிட்டர்-ன் புதிய சிஇஓ.. எலான் மஸ்க் ‘டிக்’ செய்த நபர் யார்..?! பராக் அகர்வால் வெளியேற்றமா..?!

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ட்விட்டர் கையகப்படுத்தும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எலான் மஸ்க் திரட்டிய 7.1 பில்லியன் டாலர் புதிய முதலீட்டு தொகையில் சுமார் 400 மில்லியன் டாலரை முதலீடு செய்ய Andreessen Horowitz என்னும் அமெரிக்காவின் முன்னணி முதலீட்டு நிறுவனம் ஒப்புக்கொண்டு உள்ளது.

பேஸ்புக்

பேஸ்புக்

இதில் என்ன முக்கியமான விஷயம் என்றால் Andreessen Horowitz நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்தின் ஆரம்ப கட்டத்திலேயே முதலீடு செய்து முக்கிய முதலீட்டு ஆதரவாளராக உள்ளது. இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தில் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது, இந்நிறுவனத்தின் நிறுவனர்கள் மத்தியிலும் பிரச்சனை வெடித்துள்ளது.

 Andreessen Horowitz நிறுவனர்கள்
 

Andreessen Horowitz நிறுவனர்கள்

Andreessen Horowitz நிறுவனத்தின் இணை நிறுவனரான பென் ஹொரோவிட்ஸ் டிவிட்டரில் முதலீடு செய்வதிலும், எலான் மஸ்க் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறும் நிலையில். 2008ஆம் ஆண்டு முதல் பேஸ்புக் நிர்வாகக் குழுவில் முக்கிய உறுப்பினராக உள்ள மற்றொரு இணை நிறுவனரான மார்க் ஆண்ட்ரீசென் டிவிட்டர் முதலீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

சிலிக்கான் வேலி

சிலிக்கான் வேலி

அமெரிக்கச் சிலிக்கான் வேலி சந்தையில் சக போட்டி நிறுவனத்தில் வென்சர் கேப்பிடல் நிறுவனங்கள் முதலீடு செய்வது என்பது புதியது இல்லை, ஆனால் தற்போது Andreessen Horowitz நிறுவனத்தின் நிறுவனர்கள் மத்தியிலும் பிரச்சனை உருவாகியுள்ளது. இதேவேளையில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வான பராக் அகர்வால்-ன் மனைவி வினிதா அகர்வால் இந்நிறுவனத்தில் பார்ட்னராகப் பணியாற்றி வருகிறார்.

 வினிதா அகர்வாலா

வினிதா அகர்வாலா

பராக் அக்ரவால்-ன் மனைவியின் பெயர் வினிதா அகர்வாலா, அவர் ஒரு மருத்துவர் என்பது மட்டும் அல்லாமல் ஸ்டான்போர்டு ஸ்கூல் ஆப் மெடிசின் கல்லூரியில் துணை மருத்துவப் பேராசிரியர் ஆக உள்ளார்.

Andreessen Horowitz பார்ட்னர்

Andreessen Horowitz பார்ட்னர்

இது மட்டும் அல்லாமல் Andreessen Horowitz வென்சர் கேப்பிடல் நிறுவனத்தில் மருத்துவச் சிகிச்சை, நோயறிதல் மற்றும் டிஜிட்டல் ஆரோக்கியம், பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்கு முதலீட்டை ஈட்டும் முக்கியமான பணியைச் செய்து வருகிறார் வினிதா அகர்வாலா. இந்நிறுவனத்தின் பார்ட்னராக உள்ளார்.

பராக் அகர்வால் பணிநீக்கம்

பராக் அகர்வால் பணிநீக்கம்

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றினால் முதலாவதாகப் பணிநீக்கம் செய்யப்படுவது சிஇஓ-வான பராக் அகர்வால் தான், இதற்கு முக்கியக் காரணம் அரம்பக் கட்டத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாகச் சில காலம் எலான் மஸ்க்-ஏ இருக்கவும் திட்டமிட்டு உள்ளார்.

நெருக்கடி

நெருக்கடி

இந்த இக்கட்டான சூழ்நிலையில் வினிதா அகர்வாலா தான் பணியாற்றும் Andreessen Horowitz நிறுவனத்தின் முக்கியப் பதவிகளில் இருந்தும், 400 மில்லியன் டாலர் முதலீட்டைத் தடுக்க முடியாத நிலையில் உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Elon Musk’s Twitter buyout is linked to Parag Agrawal’s wife Vineeta Agarwala

Elon Musk’s Twitter buyout is linked to Parag Agrawal’s wife Vineeta Agarwala பராக் அகர்வால் மனைவிக்கு இப்படியொரு நெருக்கடியா.. எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.