நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகக் கட்டுமான பணியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையால் தமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கட்டடப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக தற்பொழுது சிமெந்தின் விலை
2700 தொடக்கம் 3,000 ரூபாய் வரை விற்பனை செய்வதாகச்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
“கட்டுமான பணிக்குத் தேவையான இதர பொருட்களும் பல மடங்கு அதிகரித்த விலை
காரணமாக நமது தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்ட வேலைகளையும் நிறைவு செய்ய முடியாத நிலை
ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான பணத்தையும் தமது சொந்தப் பணத்திலேயே செய்து
கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு நாள் கூலியாக 2000 ரூபா பணத்தையே கூலியாகப் பெற வேண்டிய நிலை
ஏற்பட்டுள்ளதுடன், அத்தொகையில் தமது குடும்ப வாழ்வாதாரத்தை மேற்கொள்ள
முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இதன் காரணமாகப் பல வேலைகள் இடைநடுவே கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும்,
விலை அதிகரித்ததன் காரணமாகப் பலருக்குக் கட்டுமான பணிகளை இடைநடுவே கைவிட வேண்டிய
நிலையும் காணப்படுகிறது” இவ்வாறு கூறியுள்ளனர்.