பெண்களே! அந்த இடத்தில் அரிப்போ எரிச்சலோ ஏற்படுகின்றதா? என்ன செய்யலாம்?


பொதுவாக பெண்களுக்கு யோனி பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் லேசர் முறைகள், வேக்சிங் செய்தல் போன்றவற்றால் சருமம் சிவந்து போய் அரிப்புடன் காணப்படும்.

இதனை போக்க கண்ட கண்ட கிரீம்களை தான் போட வேண்டும் என்ற அவசியமில்லை.

ஒரு சில எளிய வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். 

  • ஓட்ஸ் உடன் 1 டேபிள் ஸ்பூன் சூடான நீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
  • 1 டீஸ்பூன் பட்டர், 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி 30 நிமிடங்கள் விட்டு விடவும். பிறகு கழுவி விடுங்கள். இது ஒரு நாளைக்கு இரண்டு தடவை என செய்து வாருங்கள்.
  • யோனி பகுதியில் ஏற்படும் அரிப்பை போக்க ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து கைகளைக் கொண்டு நசுக்கியோ அல்லது பேஸ்ட்டாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். 1/2 மணி நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு திரும்பவும் செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.
  • கற்றாழை ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி உலர விடவும். பிறகு கழுவி விடுங்கள். இதை ஒரு நாளைக்கு இரண்டு தடவை என சில நாட்களுக்கு செய்து வாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.
     



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.