பொருளாதார வீழ்ச்சியில் தென்னாசிய நாடுகள்.. இலங்கை, நேப்பாள், பாகிஸ்தான்.. அடுத்தது யார்..?!

இலங்கையில் கட்டுப்படுத்த முடியாத மக்கள் போராட்டம், ஊழியர்கள் வேலைநிறுத்தம், தொடர்ந்து உயரும் விலைவாசி இப்படிப் பல காரணங்களுக்காக மக்கள் அந்நாட்டு அரசின் மீது கோபத்தின் உச்சத்தில் இருக்கும் வேளையில், இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெள்ளிக்கிழமை இரவு 2வது முறையாக அவசரகால நிலையை அறிவித்தார்.

ஆனால் கிட்டத்தட்ட இந்தியாவைச் சுற்றியுள்ள 3 நாடுகளில் இதேபோன்ற பொருளாதார நெருக்கடியில் தான் உள்ளது..

எச்.டி.எப்.சி வீட்டுக் கடன் வட்டி விகிதம் மே 9 முதல் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

இலங்கை, நேபாளம், பாகிஸ்தான்

இலங்கை, நேபாளம், பாகிஸ்தான்

இந்தியாவின் அண்டை நாடுகளும், சீனாவின் நட்பு நாடுகளுமான இலங்கை, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளின் ஓரே நேரத்தில் பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்த நிலைக்கு முறையற்ற நிர்வாகம், அதிகரித்து வரும் வெளிநாட்டுக் கடன் மற்றும் உணவு எரிபொருள் பணவீக்கம் ஆகியவை தான் முக்கியக் காரணமாக உள்ளது.

சீனா

சீனா

இதைவிட முக்கியமாகப் பொருளாதார அழுத்தத்தில் உள்ள இந்த மூன்று நாடுகளும் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசின் சீன பெல்ட் ரோடு முயற்சியில் முக்கியப் பங்கு வகித்தது. மேலும் சீன EXIM வங்கியில் மிகப்பெரிய அளவிலான தொகையை வணிகக் கடனாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய பொருளாதாரம்
 

இந்திய பொருளாதாரம்

இந்தியாவைச் சுற்றியுள்ள இந்திய 3 நாடுகளின் பொருளாதார நெருக்கடி மூலம் இந்தியாவிற்குப் புதிய சவால்கள் உருவாகியுள்ளது. ஏனெனில் இந்த நாடுகளில் உள்ள மக்களின் பிழைப்புக்காக இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும். இந்தியாவின் பொருளாதாரம் ஏற்கனவே தடுமாற்றத்தில் இருக்கும் போது இது கூடுதல் சுமையாகப் பார்க்கப்படுகிறது.

அகதிகள்

அகதிகள்

ஏற்கனவே இலங்கையிலிருந்து வரும் மக்களைத் தமிழ்நாடு அரவணைத்து தேவையான உதவிகளைச் செய்து வரும் நிலையில், நேபாளத்திலிருந்தும் எல்லைகளைக் கடந்து மக்கள் இந்தியாவுக்கு அகதிகள் வர துவங்கியுள்ளனர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

இம்ரான் கான் வெளியேறிய பின்னர்ப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்பு சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான நட்புறவு மேம்பட்டு உள்ளது. இதன் வாயிலாக இரு நாடுகளிடம் இருந்தும் கடன் பெற்றுள்ளது.

மோசமான நிர்வாகம்

மோசமான நிர்வாகம்

இலங்கை, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளின் இந்த நிலை கடந்த மாதமோ, கடந்த வருடமோ உருவாகவில்லை, நீண்டகால அடிப்படையில் பல தவறான நிர்வாக முடிவுகளின் வாயிலாக இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அடுத்தது யார்..?

அடுத்தது யார்..?

இந்த நிலையில் இருந்து மீண்டு வர பெரிய அளவில் உதவிகள் இந்த 3 நாடுகளுக்கும் தேவை, அதேவேளையில் சீனா இந்திய 3 நாடுகளுக்கும் நிதியுதவி அளிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சர்வதேச நிதியியல் அமைப்புகளும், இந்திய அரசின் உதவிகளைத் தான் நம்பியுள்ளது.

மேலும் இந்த 3 நாடுகளின் நிலையைப் பார்த்த பின்பு அடுத்தது யார் என்ற கேள்வி எழுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Emergency in Sri Lanka, Nepal, Pak forex dips edge of economy collapse; South Asian countries in Trouble

Emergency in Sri Lanka, Nepal, Pak forex dips edge of economy collapse; South Asian countries in Trouble பொருளாதார வீழ்ச்சியில் தென்னாசிய நாடுகள்.. இலங்கை, நேப்பாள், பாகிஸ்தான்.. அடுத்தது யார்..?!

Story first published: Saturday, May 7, 2022, 16:33 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.