மதுரையில் தொடர்ந்து 365 நாட்களாக தெருவோர ஏழைகளுக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மதுரையில் வீடற்ற ஏழைகள், சாலையோரம் வசிக்கும் மக்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுடன் வருபவர்களுக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று காலத்தில் சமூக ஆர்வலர் நெல்லை பாலு என்பவர் 3 வேளையும் உணவு வழங்கி வருகிறார்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலத்தில துவங்கிய இந்த சேவையை தொடர்ந்து ஓராண்டு நிறைவு செய்து தொடரும் இவரின் இந்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. எந்த வித எதிர்ப்பார்ப்பும் இன்றி ஏழைகளுக்கு, நோயாளிகளுக்கும், உணவு பொட்டலங்களை இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து வழங்க உள்ளதாக நெல்லை பாலு தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
