மத்திய பிரதேசத்தில் அடுக்கு குடியிருப்பில் தீ விபத்து: 7 பேர் பலி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு அடுக்கு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்தூரில் உள்ள இரண்டு அடுக்கு குடியிருப்பில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ கட்டடம் முழுவதும் பரவிய நிலையில், தீயில் கருகி 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
Madhya Pradesh: Seven dead in fire at residential building in Indore |  Indore News - Times of India

மின் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், இரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மக்கள், என்ன நடப்பது என தெரிவதற்கு முன்பே உயிரிழந்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.