Optical Illusion: can you see woman in the picture?: சமீபகாலமாக ஆப்டிகல் மாயை மற்றும் பட புதிர்கள் நெட்டிசன்கள் இடையே பிரபலமாகி வருகின்றன. நெட்டிசன்கள் இந்த வகையான புதிர்களை கண்டுபிடிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். தற்போது சமூக ஊடகங்கள் ஒளியியல் மாயைகளைக் கொண்ட பதிவுகளால் நிரம்பி வழிகின்றன. இவை முதலில் எளிமையானதாகத் தோன்றும், ஆனால் கண்டுபிடிப்பது கடினம்.
இதனிடையே தற்போது பழைய ஓவியம் ஒன்று ஆப்டிக்கல் மாயை புதிருக்காக இணையத்தில் வைரலாகி வருகிறது. 1991 ஆம் ஆண்டு ஒலெக் ஷுப்லியாக் என்பவரால் வரையப்பட்ட எண்ணெய் ஓவியம், ஆற்றின் இரு கரையிலிருந்தும் மரங்கள் தோன்றிய வனப்பகுதியைக் காட்டுகிறது. இந்த எளிய புகைப்படத்தை சாதாரணமாக பார்க்கும் போது ஒன்றும் தோன்றாது. நெட்டிசன்கள் இடையே இந்த புகைப்படம் வைரலாக இது காரணம் இல்லை. பின்னர் என்ன தான் காரணம் இந்த புகைப்படம் வைரலாக மாற, இந்த ஓவியம் ஒரு பெண்ணின் அபாயகரமான உருவத்தை மறைத்து வைத்துள்ளது. உன்னிப்பாகக் கவனிக்கும் பார்வையாளர்கள் மட்டுமே அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியும்.
முயற்சி செய்யுங்கள்; உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பார்ப்போம்.
உங்களால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? சரி, ஓவியத்தை உன்னிப்பாகப் பார்த்தால், கிளைகள் மற்றும் மரத்தின் தண்டுகளுக்கு இடையில் ஒரு வெற்று இடைவெளி இருப்பதை நீங்கள் கவனிக்கலாம், இது சித்தரிப்புக்கு நடுவில் நிர்வாணமான பெண் நிற்பது போன்ற ஒரு மாயையை உருவாக்குகிறது. அந்த பெண் திரும்பி நிற்பதுபோல் சித்தரிப்பு உள்ளது.
இதையும் படியுங்கள்: முடிந்தால் ஓவியத்தில் மறைந்திருக்கும் 13 முகங்களை கண்டுபிடியுங்கள்!
மாயையில் சித்தரிக்கப்பட்ட பெண் உருவம் பண்டைய ஸ்லாவிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பெரெஹினியா என்ற தேவதையின் சித்தரிப்பு என்று கூறப்படுகிறது. கிழக்கு ஸ்லாவிக் புராணங்களில் பெரெஹினியா ஒரு தூய ஆன்மா, ஒரு கொடையான தாய் மற்றும் நீர்நிலைகளின் பாதுகாவலர்.
இந்த ஆப்டிக்கல் மாயை புதிர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.