பெங்களூரு:”மிளகாயில் இருந்து மருந்து தயாரிப்பதற்கு இருக்கும் சாத்திய கூறுகள் ஆராய வேண்டும்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்
.கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது குறித்து, தோட்டக்கலைத்துறை சார்பில் பெங்களூரில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாவது:மிளகு மற்றும் சாம்பார் பதார்த்தங்களின் தரத்தை உயர்த்த பேடகியில் ஆராய்ச்சி மையம் திறக்க வியாபாரிகளின் ஆலோசனை பெறப்படும்.
தோட்டக்கலைத்துறையில் புதிய தொழில்நுட்பங்கள், இயந்திரங்களை பயன்படுத்த நிபுணர்களிடம் ஆலோசனை கேட்கப்படும்.குடகு மற்றும் ஜாம்போட்டி தேனை பிரபலமாக்க மார்க்கெட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரின் எலஹங்காவில் ‘அடல் பிஹாரி வாஜ்பாய்’ பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட நிலம், தோட்டக்கலைத்துறைக்கு மாற்றப்படும்.
அழகு சாதன பொருட்கள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்தும் மிளகாயில் இருந்து மருந்துகளை உற்பத்தி செய்யும் சாத்தியங்கள் குறித்து ஆராய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement