திருப்பூரில், ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2 டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
எத்திலீன் எனப்படும் ரசாயனம் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், திருப்பூரில் அரிசி கடை வீதி, மார்க்கெட் பகுதிகளில் உள்ள பழக்கடைகளிலும், குடோன்களிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது 4 கடைகளில் எத்திலீன் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சுமார் 2 டன் மதிப்பிலான மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.