ரஷ்யாவின் அதிநவீன டாங்கிகளில் ஒன்று உக்ரைன் துருப்புக்களால் அழிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, ரஷ்யாவின் அதிநனிவா டாங்கிகளில் ஒன்றான T-90M டாங்கி உக்ரைனில் அழிக்கப்பட்டுள்ளது.
இந்த டாங்கி ரஷ்யாவின் இராணுவத்தில் மிகவும் மேம்பட்டது மற்றும் சுமார் 100 டாங்கிகள் பயன்பாட்டில் உள்ளன.
நடுவானில் உக்ரைனை நோக்கி சரமாரியாக ராக்கெட்டுகளை ஏவிய ரஷ்ய ஹெலிகாப்டர்! வீடியோ ஆதாரம்
பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, உக்ரைன் போரில் ரஷ்யா தனது திறமையான துருப்புகளையும் ஆயுதங்களையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. இந்த மோதலைத் தொடர்ந்து ரஷ்யா தனது ஆயுதப் படைகளை மறுசீரமைக்க கணிசமான நேரத்தையும் செலவையும் எடுக்கும் என்று தெரிவித்துள்ளது.
Latest Defence Intelligence update on the situation in Ukraine – 07 May 2022
Find out more about the UK government’s response: https://t.co/cAYdsWHMvV
🇺🇦 #StandWithUkraine 🇺🇦 pic.twitter.com/4z2cRVCJpf
— Ministry of Defence 🇬🇧 (@DefenceHQ) May 7, 2022
குறிப்பாக முக்கியமான மைக்ரோ எலக்ட்ரானிக் கூறுகளுக்கான ரஷ்யாவின் அணுகலைக் கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தடைகள் காரணமாக நவீனமயமாக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட உபகரணங்களை மாற்றுவது ரஷ்யாவுக்கு சவாலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.