ஹோட்டல் இடிந்து 25 பேர் உயிரிழப்பு| Dinamalar

ஹவனா:நட்சத்திர ஹோட்டலின் எரிவாயு குழாயில், ‘காஸ்’ கசிந்து வெடி விபத்து ஏற்பட்டதில், 14 குழந்தைகள் உட்பட, 25 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 74 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
வட அமெரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் இடையே, கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடான கியூபாவின் தலைநகர் ஹவனாவில், ‘சர்டோகா’ என்ற நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு, சில நாட்களாக பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால், அறைகளில் யாரும் தங்கியிருக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம், ஹோட்டலில் உள்ள எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால், ஹோட்டல் கட்டடம் இடிந்து விழுந்தது மட்டுமின்றி, அருகிலுள்ள கட்டடங் களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கி, 14 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்த 74 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.