இந்திய ரிசர்வ் வங்கி மே 4-ம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்திலிருந்து 4.4 சதவீதமாக உயர்த்தியது. எனவே பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களும் விரைவில் உயரும் என தெரிவித்து இருந்தோம்.
அதை உறுதி செய்யும் விதமாக பல்வேறு முக்கிய வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக லாபம் அளிக்கும் 5 வங்கிகள் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
இது ரொம்ப லேட்டு.. ரிசர்வ் வங்கி செய்தது பெரும் தவறு..?!
கரூர் வைசியா வங்கி
கரூர் வைசியா வங்கியில் 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 5.80 சதவீத வட்டி விகிதம் லாபம் அளிக்கிறது.
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி
ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் 6.25 சதவீத லாபம் கிடைக்கும்.
டிசிபி வங்கி
டிசிபி வங்கி 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 6.25 சதவீத வட்டி விகித லாபம் வழங்கப்படுகிறது.
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் வங்கியின் 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 6.30 சதவீத லாபம் கிடைக்கும்.
இண்டஸ்ஸ் இண்ட் வங்கி
மேலே கூறிய 5 வங்கிகளை விட அதிகமாக இண்டஸ்ஸ் இண்ட் வங்கி 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 6.50 சதவீத லாபத்தை அளிக்கிறது.
வருமான வரி விலக்கு
5 வருட பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரி சட்டப்பிரிவு 80 சி கீழ் வரி விலக்கும் வழங்கப்படுகிறது.
India’s 5 banks offering higher returns on 5-year Fixed Deposit Schemes
India’s 5 banks offering higher returns on 5-year Fixed Deposit Schemes | 5 வருட பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு அதிக லாபம் அளிக்கும் 5 வங்கிகள்!