Car Design Workshop: உங்கள் பிள்ளைகளுக்கு கார்கள் மீது ஆர்வமா? இந்தப் பயிலரங்கம் அவர்களுக்குத்தான்!

சாலையில் எந்தக் காரைப் பார்த்தாலும் உங்கள் பிள்ளையோ பெண்ணோ அதைப் பற்றியே நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கிறார்களா? அந்தக் கார் தொடர்பாக கேள்விகளாய் கேட்டு உங்களைத் துளைத்து எடுக்கிறார்களா? அவர்களின் கேள்விகள் பலவற்றுக்கு பதில் இல்லாமல் திண்டாடுகிறீர்களா? கவலை வேண்டாம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் உங்களின் பிள்ளைகள் குறித்து நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்.

ஆம். அவர்களுக்கு இருக்கும் கார்/பைக் பற்றிய ஆர்வத்தைச் சரியாக மடைமாற்றினால் அவர்களின் பார்வை ஆட்டோமொபைல் பொறியியல் பக்கம் திரும்பும். கார் மற்றும் பைக் டிசைனிங் குறித்து அவர்களுக்குள் மேலும் பல கேள்விகள் துளிர்க்க வைக்கும். கலா ரசனையும், கற்பனை திறனும், பொறியியல் அறிவும் கைகோத்து செயல்படும் இந்தத் துறை மிக மிக அரிதான ஒரு துறை. இந்தத் துறையில் வல்லுனர்கள் மிக மிகக் குறைவு. அதனால் உலகம் எங்கும் இந்தத் துறையில் பணியாற்றக்கூடியவர்களுக்கு தேவை அதிகம். ஊதியமும் அதிகம். மதிப்பும் அதிகம்.

Car Design Workshop

நம் நாட்டில் பொறியியல் கல்லூரிகள் இருக்கும் அளவுக்கு டிசைனிங் கல்லூரிகள் இல்லை. ஆம், இந்தியா முழுவதுமே விரல்விட்டு எண்ணக் கூடிய அளவுக்குத்தான் தரமான டிசைனிங் கல்லூரிகள் இருக்கின்றன. இந்தக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வெறுமனே மதிப்பெண்கள் மட்டும் போதாது. இந்தத் துறை குறித்து தெளிவான பார்வை இருக்க வேண்டும். அடிப்படைகள் தெரிந்திருக்க வேண்டும்.

ஆட்டோமொபைல் துறையில் அதிலும் குறிப்பாக கார் மற்றும் பைக் டிசைனிங் துறைக்குச் செல்ல வேண்டும் என்று உங்கள் பிள்ளையோ பெண்ணோ கருதினால், இந்தப் பயிலரங்கம் அவர்களுக்குத்தான்.

இந்தத் துறையில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட க.சத்தியசீலன்தான் இந்தப் பயிலரங்கத்தை நடத்தயிருக்கிறார். அசோக் லேலாண்டு நிறுவனத்தின் டிசைனிங் பிரிவின் தலைவராகச் செயல்பட்டுவரும் இவர், ஜெனரல் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், நிஸான் மற்றும் டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்து அனுபவங்களைத் திரட்டியவர். IIT, IISC மற்றும் NID எனப்படும் National Institute of Design போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பவர். இவர் தலைமையின் கீழ் இயங்கும் AYA Design Academy ஆர்வமும் திறமையும் கொண்ட பல மாணவர்கள் டிசைனர்களாக உருவெடுக்க வித்திட்டிருக்கிறது.

Car Design Workshop

இந்தப் பயிலரங்கம், இந்த மாதம் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சென்னையில் இருக்கும் விகடன் அலுவலகத்தில் நடக்கயிருக்கிறது. இது பற்றி மேலும் விபரங்கள் இங்கே https://bit.ly/37Yk3fi கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பவர்:

க.சத்தியசீலன், Vice President & Design Head of Ashok Leyland.,

டாடா மோட்டார்ஸ், நிஸான், டிவிஎஸ் எனப் பல நிறுவனங்களில் பணியாற்றியவர். தற்போது அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். IIT, IISC, NIT என பல கல்லூரிகளில் டிசைன் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறார். இவர் MIT (புனே) உள்ளிட்ட கல்விக்குழு உறுப்பினரும்கூட!

Car Design Workshop

DATE: மே 28 & 29 (சனி & ஞாயிறு)

TIME: காலை 09.00 – மாலை 06.00 மணி வரை

Registration Fee (பதிவு கட்டணம்): Rs. 2500/-

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்/Register Here: https://bit.ly/37Yk3fi

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.