Jio 5G: ஜியோ 5ஜி வேகம் என்ன தெரியுமா மக்களே!

இந்தியாவில் 5ஜி சேவை எப்போது தொடங்கப்படும் என்று பயனர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 5G சேவையில் ஆர்வமுள்ளவர்கள் இன்று ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், 5ஜி சேவை எந்த தேதி முதல் பயனர் பயன்பாட்டுக்கு வரும் என்று உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல்,
ஜியோ
ஆகியன, 5G சேவைக்குத் தேவையான பணிகள் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். வெளியாகியிருக்கும் தகவல்களின்படி, இந்தியாவில் இந்த ஆண்டிற்குள் 5ஜி சேவை பயனர்களுக்கு வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

ஜியோவின் 5ஜி வேகம் (Jio 5G Speed)

ஜியோ, ஏர்டெல், VI (வோடபோன் ஐடியா) ஆகியவை நாட்டில் 5ஜியை சோதனை செய்கின்றன. மே 6ஆம் தேதி
ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனம் 5G சோதனையின் போது எடுக்கப்பட்ட சில புள்ளி விவரங்களை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, அவர்கள் 8 மாநிலங்களில் 1.5Gbps 5G வேகத்தை எட்டியதாக கூறப்படுகிறது. ஜியோவின் சோதனை வேகம் வோடபோன் ஐடியாவை விட குறைவு என்பது கவனிக்கத்தக்கது.

NordVPN: கடையை காலி செய்யும் நார்ட் விபிஎன்!

வோடபோனை ஐடியாவை விட வேகம் குறைவு

ஜியோ பல தயாரிப்புகளுடன் 5G சேவையின் வேகத்தை சோதனையை செய்து வருகிறது. வோடபோன் ஐடியா வெளியிட்ட அறிக்கையின்படி, சோதனைகளில் M-MIMO, மைக்ரோ, வெளிப்புறம் மற்றும் உள்புற சிறிய செல்கள் அடங்கும். கடந்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்பட்ட சோதனையில் வோடபோன் 3.7Gbps வேகத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

Elon Musk Twitter: ட்விட்டர இனி சும்மா பயன்படுத்த முடியாது!

ஜியோவின் அபார லாபம்

ரிலையன்ஸ் ஜியோ தனது 5ஜி சோதனை முடிவுகளுடன், நான்காவது காலாண்டு முடிவுகளையும் வெளியிட்டது அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. மார்ச் 2022 காலாண்டில் இந்நிறுவனம் ரூ.4,173 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டை விட 25% விழுக்காடு அதிகமாகும்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

தொடர்ந்து மூன்றாவது காலாண்டாக ஜியோ பயனர்களை இழந்துள்ளது. அதன்பின் கடந்த ஆண்டை விட அதிக லாபம் ஈட்டியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் நிறுவனம் தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இதனால் சிறிதளவு பயனர்களை இழந்ததாக கூறப்பட்டது.

எனினும், நிலவிலுள்ள வாடிக்கையாளர்களைக் கொண்டும், புதிய வாடிக்கையாளர்களுடனும் சந்தையில் நிறுவனம் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவு வளர்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்:
Facebook Reels: கிரியேட்டர்களுக்கு ஜாக்பாட் – மாதம் ரூ.3 லட்சம் வரை பேஸ்புக் ரீல்ஸில் சம்பாதிக்கலாம்!WhatsApp Update: அட்மினுக்கு அதிகாரம்; பெரிய பைல்கள் – பலே அம்சங்களை வெளியிட்ட வாட்ஸ்அப்!Elon Musk Twitter: ட்விட்டர இனி சும்மா பயன்படுத்த முடியாது!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.