NordVPN: கடையை காலி செய்யும் நார்ட் விபிஎன்!

இந்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம், கடந்த வாரம்
VPN
நிறுவனங்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி அளித்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இத்துறையில் பிரபலமாக விளங்கி வரும் நார்ட்
விபிஎன்
நிறுவனம் தங்கள் சர்வெர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதாக அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அரசின் இந்த புதிய தொழில்நுட்பச் சட்டம், இணையப் பயனர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது, இதுபோன்ற விபிஎன் நிறுவனங்கள் பயனர் தரவுகளை 5 ஆண்டுகள் வரை சேமிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் CERT-In எனப்படும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழுவும், தரவுகள் சேமிக்கும் மையங்கள் மற்றும் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் மையங்களிடம் இதே உத்தரவை கடைபிடிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. பயனர்கள் தரவை சேமித்தால் VPN சேவையின் தேவையே இல்லாமல் போய்விடும் என்பது நிறுவனங்களின் புலம்பலாக உள்ளது.

ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது – VPN நிறுவனங்களுக்கு புதிய விதிகள்!

நாட்டை விட்டு வெளியேறும் NordVPN

இந்த நடைமுறையைப் பின்பற்றத் தவறினால், புதிய சட்டங்களுக்கு உட்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் இந்திய மின்னணு மற்றும்
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்
எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, ஒரு பயனர் தனது விபிஎன் சேவைக்கான சந்தாவை ரத்து செய்த பிறகும், நிறுவனங்கள் அந்த பயனரின் பழைய தகவல்களை சேமித்து வைத்திருக்க வேண்டும்.

இது குறித்து தற்போது தனியார் ஊடகத்தில் கருத்து தெரிவித்திருக்கும் முன்னணி VPN நிறுவனமான நார்ட் விபிஎன், “பயனர்களின் தனியுரிமை தகவல்கள் பாதுகாப்பு என்ற மையப் புள்ளியில் விபிஎன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்த சூழலில், இந்தியாவில் அவ்வாறான சேவையை வழங்க முடியாது என்று நினைக்கிறோம்.”

“எனவே, இந்தியாவில் உள்ள எங்களின் விபிஎன் சர்வெர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளோம். எனினும், இந்திய பயனர்களுக்கு சேவைகளை தொடர்ந்து வழங்குவோம். அவர்கள் சர்வெர்களை வேறு நாடுகளில் தேர்ந்தெடுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

Facebook Reels: கிரியேட்டர்களுக்கு ஜாக்பாட் – மாதம் ரூ.3 லட்சம் வரை பேஸ்புக் ரீல்ஸில் சம்பாதிக்கலாம்!

விபிஎன் என்றால் என்ன?

இந்தியாவில் பலர் தங்களின் தனியுரிமையை தகவல்களை பாதுகாக்க VPN சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். VPNகள், அதாவது விர்ச்சுவல் ப்ராக்ஸி நெட்வொர்க்குகள், பயனரின் இருப்பிடம் போன்ற தரவைக் கண்காணிக்கக்கூடிய இணையதள டிராக்கர்களை முடக்கி, தரவுகளை சேமிக்க விடாமல் தடுக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப் படும்போது, நிறுவனங்கள் தனி ஸ்டோரேஜ் சர்வெர்களுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இது பயனர்களின் அனைத்து தகவல்களையும் சேமித்து ஐந்து ஆண்டுகள் வரை அப்படியே வைத்திருக்கும். இது நிறுவனங்களுக்கு கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தும் என்பது வேதனைக்குரிய ஒன்று.

மேலும், தனியுரிமை பாதுகாப்பு வேண்டி VPN சேவைகளை நாடும் பயனர்களுக்கு, பாதுகாப்பு குறைபாடுடன் கூடிய தேவையற்ற செலவினமாக விபிஎன்கள் மாறக்கூடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களின் பயனர்களை விபிஎன் நிறுவனங்கள் இழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.