கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்திய ரிசர்வ் வங்கியின் (
RBI
) புதிய ஆட்டோ டெபிட் விதிகளின் விளைவாக, இந்தியாவில்
ஆப்பிள்
ஐடியைப் பயன்படுத்தி செயலிகளை வாங்குதல்கள் மற்றும் சந்தாக்களுக்கான கட்டணங்கள் செலுத்தும் முறைக்கு நிறுவனம் தடை விதித்துள்ளது.
புதிய விதிகள் ஏற்கனவே தொடர்ச்சியான ஆன்லைன் பரிவர்த்தனைகளை சீர்குலைத்துள்ளதாக ஆப்பிள் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆப்பிளின் புதிய நடைமுறைப்படி, இந்திய பயனர்கள் அவர்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி, App Store-இல் இருந்து செயலிகளை வாங்க முடியாது.
ஓடவும் முடியாது… ஒளியவும் முடியாது – VPN நிறுவனங்களுக்கு புதிய விதிகள்!
கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு தடை
அதுமட்டும் இல்லாமல்,
Apple
Music, iCloud+ போன்ற தளங்களில் சந்தா செலுத்தவோ, மீடியா கன்டென்டுகளை வாங்கவோ முடியாது. கிரெடிட், டெபிட் கார்டு பேமெண்ட் வசதியை தளத்தில் இருந்து நீக்கியது தொடர்பாக பெரும்பாலான ஆப்பிள் பயனர்கள் நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளனர்.
பணம் செலுத்தும் முறையாக, தங்கள் கணக்கில் ஏற்கனவே கார்டைச் சேர்த்த பயனர்களும், தங்கள் ஆப்பிள் ஐடி மூலம் புதிதாக பணம் செலுத்த முடியாது. பணம் செலுத்தும் பக்கத்தில் “இந்த வகை பேமெண்ட் இனி ஆதரிக்கப்படாது” என்ற தகவல் திரையில் தோன்றுவதாக பயனர்கள் புகார் கூறியுள்ளனர்.
ஆப்பிளின் ஆதரவுப் பக்கம், ஒவ்வொரு நாட்டிற்கும் கிடைக்கக்கூடிய கட்டண விருப்பங்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவில் UPI, நெட்பேங்கிங் மற்றும் ஆப்பிள் ஐடி வேலட் இருப்பு ஆகிய மூன்று விருப்பங்களை மட்டுமே பணம் செலுத்துவதற்காக காட்டுகிறது. இந்த புதிய மாற்றம் ஏப்ரல் 18 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
சியோமி மீது கைவைத்த அமலாக்கத்துறை – ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்!
ஆப்பிள் அறிக்கை
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளது. நீங்கள் இந்திய டெபிட் அல்லது கிரெடிட் கார்டை வைத்திருந்தால், உங்களிடம் சந்தா இருந்தால், இந்த மாற்றங்கள் உங்கள் பரிவர்த்தனைகளை பாதிக்கும். சில பரிவர்த்தனைகள் வங்கிகள் மற்றும் கார்டு வழங்குநர்களால் நிராகரிக்கப்படலாம்.
ரிசர்வ் வங்கியின் புதிய ஆட்டோ-டெபிட் விதிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் செயல்படுத்தப்பட்டது. இது, இந்தியாவில் உள்ள ஆப்பிள் பயனர்களிடமிருந்து, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் தொடர்ச்சியாக பணம் பெறுவதில் இருந்து நிறுவனத்தைக் கட்டுப்படுத்துகிறது.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, “ஆப்பிள் போன்ற வணிகர்கள் கார்டுகளுக்கான e-Mandate அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இரண்டு அடுக்கு பாதுகாப்பு அங்கீகாரத்தைப் பயன்படுத்த வேண்டும். அதே சமயம் தொடர்ச்சியான கட்டணங்களும் e-Mandate அமைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளர்கள் ரூ.5,000க்கு மேல் பணம் செலுத்தும் போது, பயனர்கள் சுய ஒப்புதல் அளிக்க வேண்டும்.” என்று விதிகள் கூறுகின்றன.